உலகம் முழுவதும் காய்ச்சல் வைரஸ்கள் புதிய வடிவமெடுத்து வருகின்றன. ‘வெறும் சளிதானே’ என்று நாம் சாதாரணமாக நினைக்கும் காய்ச்சலுக்குப் பின்னால், மிக வேகமாக உருமாறும் வீரியமிக்க கிருமிகள் ஒளிந்திருக்கின்றன. கனடாவிலும், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலும் பரவி வரும் இந்தப் புதிய வகை வைரஸ்கள், உலகளாவியச் சுகாதாரப் பாதுகாப்புக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளன.
கனடாவில் இப்போது H3N2 வைரஸின் ஒரு புதிய பிரிவான ‘சப்-கிளேட் கே’ (Subclade K) மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது. கனடாவின் ஆட்டாவா போன்ற நகரங்களில் இந்த வைரஸ் பாதிப்பால் குழந்தைகள் உயிரிழந்த சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அங்குள்ள சிறுவர் மருத்துவமனைகளில் (CHEO) வழக்கத்தை விடப் பல மடங்கு அதிகமான குழந்தைகளுக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது ஒரு சாதாரணக் காய்ச்சலாக இல்லாமல், கடுமையான மூச்சுத்திணறல் மற்றும் நீண்டகால உடல் உபாதைகளை ஏற்படுத்துவதால் இதை மருத்துவர்கள் ‘சூப்பர் ஃப்ளூ’ என்று அழைக்கின்றனர்.















Add Comment