அந்த நாளும் வந்திடாதோ “அடேயப்பா… இதெல்லாம் செய்யுதா ஏ.ஐ?” என்னும் பிரமிப்பு இன்று அதிகரித்துள்ளது. ஆனால் இது வெறும் தொடக்கம் மட்டுமே. ஏ.ஐ என்கிற இராமாயணத்தில் இப்போது தான் பாலகாண்டம் ஓடிக்கொண்டிருக்கிறது. இன்று நாம் பயன்படுத்திக் கொண்டிருப்பது “கான்வெர்சேஷனல் ஏ.ஐ”. உரையாடும் ஏ.ஐ. இந்த உரையாடல்...
Tag - செயற்கை நுண்ணறிவு
ரோபோ என்பது பல இடங்களில் காணப்படும் தொழில்நுட்பம். பொதுவாகத் தானியங்கியாக இயங்கக் கூடிய இயந்திரமே ரோபா. உணவகத்தில் உணவு பரிமாறும் ரோபோ, பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ரோபோ எனப் பலவிதமான ரோபோக்கள் இப்போது பயன்பாட்டில் உள்ளன. செயற்கை நுண்ணறிவின் திறனோடு இந்த ரோபோக்களின் திறனும் பயன்பாடும் அதிகரித்து...
தினசரி பயன்படுத்தப்படும் மளிகைப் பொருட்களை எப்படி வாங்குகிறோம் என்று முதலில் பார்ப்போம். எமது பெற்றோர்களின் காலத்தில் அம்மா வீட்டில் என்னென்ன பொருட்கள் தேவை என்று பட்டியலிட்டுக் கடைக்குப் போய் வாங்குவார். அல்லது அப்பாவிடம் வாங்கி வரும்படி கொடுப்பார். அக்காலத்தில் குளிர்சாதனப் பெட்டி என்ற ஒன்று...
ஆப்பிள் பெண்ணே நீ யாரோ? ஆப்பிளுக்கு ஏ.ஐ. அலர்ஜி. இருந்தது. இப்போது குணமாகியுள்ளது. ஆப்பிள் இதுவரையிலும் ‘ஆர்ட்டிஃபீசியல் இன்டெலிஜென்ஸ்’ என்னும் வார்த்தைப் பிரயோகத்தைத் தவிர்த்தே வந்துள்ளது. சென்ற வாரம் நடந்தேறிய WWDC 2024 நிகழ்வில், உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக, ஆர்ட்டிஃபீசியல்...
விளங்க முடியா கவிதை நான் எந்தவொரு உயர் தொழில்நுட்பமும் இரட்டை முகங்களைக் கொண்டது. அதன் ஒரு முகம் எளிமை. மற்றொன்று சிக்கலான அறிவியல் முகம். தொழில்நுட்பத்தின் பயன்பாட்டு எளிமைதான் அதன் பரவலாக்கத்திற்கான முக்கியமான காரணம். உதாரணமாக, ஸ்மார்ட் ஃபோனை எடுத்துக்கொள்வோம். அது எப்படி வேலை செய்கிறது என்று...
ஃபேஸ்புக்கின் பிரதான வண்ணம் ஏன் நீலமாக இருக்கிறது? அதை உருவாக்கியவருக்கு சிவப்பு-பச்சை வண்ணங்களைத் துல்லியமாக அடையாளம் காண்பதில் பிரச்சனை. அதனால் தெளிவாகத் தெரியும் நீலத்தைத் தேர்ந்தெடுத்துவிட்டார். அவ்வளவுதான், பிரச்சனை முடிந்துவிட்டது. இலக்கில் தெளிவாக இருந்தால், அடையும் வழிகளைத் தாமாக அமைத்துக்...
‘சிப்’புக்குள் முத்து மின்சாரத்திற்கு முன் – மின்சாரத்திற்குப் பின் என்று மனிதகுல வரலாறை இரண்டாகப் பிரிக்கலாம். மின்சாரம் தொடாத துறைகளே இல்லை. பெரும்பாலான அறிவியல் கண்டுபிடிப்புகள் நம் வாழ்வின் ஒரு குறிப்பிட்ட சிக்கலைத் தீர்க்கும். இதன் மூலம் வாழ்வை எளிதாக்கும். ஆனால் மிகச் சில...
திருவனந்தபுரத்தில் உள்ள KTCT மேல்நிலைப்பள்ளி அண்மையில் ஒரு புதிய ஆசிரியரைப் பணியில் சேர்த்தார்கள். இந்த ஆசிரியரின் பெயர் ஐரிஸ். தென்னிந்தியப் பெண் ஆசிரியர்களைப் போலவே இவரும் சேலை அணிந்து பள்ளிக்கு வருகிறார். இவர் கல்வி கற்பிக்கும் வகுப்புகளில் மாணவர்கள் அதிக உற்சாகத்துடன் கலந்து கொள்கிறார்களாம்...
இந்தியாவில் இணையம் பிரபலமாகிய தருணத்தில் கணினியில் தமிழ் என்பதை முன்வைத்து ஒரு மாநாடு சென்னையில் நடந்தது. இப்போது செயற்கை நுண்ணறிவு பிரபலமாகும் நேரத்தில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு அதே தேதிகளில் மீண்டும் மாநாடு நடத்தியுள்ளது தமிழ்நாடு அரசு. நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பிப்ரவரி 8, 9, 10 தேதிகளில்...
அரசாங்கத் தொலைக்காட்சியும், வானொலியுமே பொழுதுபோக்குகளாக இருந்த 1980-களின் இறுதியில், `சிரிப்போ சிரிப்பு` என்ற தலைப்பில் ஒரு கேசட் வெளியாகியிருந்தது. அப்போது பிரபலமாக இருந்த பல காமெடி நடிகர்களின் குரல்களை மிமிக்ரி செய்து உருவாக்கப்பட்ட ஒருமணி நேரத் தொகுப்பு அது. கிட்டத்தட்ட டேப் ரெக்கார்டர்...











