ஒரு பெண்ணின் மூளையில் இந்தக் கணம் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்று பகுதியளவேனும் அறிவது சாத்தியமற்றது. அதனால் குறைந்தபட்சம் பெண் ஈயின் மூளையையாவது புரிந்து கொள்ளலாமென்று புறப்பட்டார்களா தெரியாது. பயணம் வெற்றி பெற்று விட்டது. அறிவியல் வரலாற்றில் முதன் முறையாக, ஒரு முழு அங்கியின் மூளை, மொத்தமாக...
Tag - இனிப்பு
அல்வா. நாக்கில் ஒட்டிக்கொள்ளும் தித்திப்பு. கையில் ஒட்டாத வழவழப்பு. திருநெல்வேலி அல்வா, கோதுமை அல்வா, அசோகா அல்வா என எல்லா வகை அல்வாக்களுக்கும் நெய்யும் சர்க்கரையும்தான் அஸ்திவாரம். சர்க்கரை தூக்கலாகப் போட்டு நெய்யைத் தாராளமாக விட்டால்தான் வழுக்கிக்கொண்டு விழும் அல்வா பதம் கிடைக்கும்...
நெய் மைசூர் பாகு. கையில் எடுக்கும்போதே பஞ்சு போல நெகிழும். நாக்கில் லேசாக ஒட்டி தொண்டைக் குழிக்குள் நழுவிவிடும். நெய் வாசனையா?, லேசான தித்திப்பா? கடலை மாவின் மென்மையா? -எது இன்னொரு விள்ளலை எடுக்கச் சொல்லும் என்பது தெரியாது. ஒன்று போதும் என்று மூளை சொன்னாலும் நாக்கில் ஒட்டிக்கொண்ட ருசி கையை இயக்கி...
பொதுவாகச் சுற்றுலா சென்றோமென்றால் பின்னாளில் நினைத்து மகிழ ஆயிரம் நினைவுகள் சேகரமாகும். எனக்கு துருக்கிப் பயணம் அப்படித்தான் அமைந்தது. நகரத்தின் பழமை கண்களுக்கும் மனத்துக்கும் நிறைவைத் தந்தது. பல நூற்றாண்டுகளுக்கு முன் டமாஸ்கஸைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்த உதுமானியர்கள்தான் அதற்குக் காரணம்...
விருந்தாளிகள் வந்தால் சமையலில் வடை பாயசம் நிச்சயம் இருக்கும். பாயசம் போல சிரமமில்லாமல் செய்யக்கூடிய இனிப்பு பிறிதொன்றில்லை. சிலர் கேசரி கிளறிப் போடுவர். அதற்கும் மேலே போய் எதற்கு வம்பு என்று கடையில் வாங்கி சபையில் வைத்து விடுவோரும் உண்டு. ஆனால் ஒருமுறை அத்தாட்டி வீட்டிற்குப் போனபோது பால்...
நன்றாகச் சாப்பிடுவதற்கு நமக்கு நன்றாகச் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் சமையலின் அடிப்படை தெரிந்திருக்க வேண்டும். எதை எதோடு எவ்வளவு சேர்த்தால் குறிப்பிட்ட ருசி வரும் என்ற புரிதல் வேண்டும். அதற்காகவெல்லாம் அதிகச் சிரமப்பட தேவையில்லை. தொடர்ந்து ருசித்துச் சாப்பிட்டு வந்தாலே போதும்...