கொல்லத்திலிருந்து புறப்பட வரிசையில் நிற்கையில், மூன்று நாள் கடந்து விட்ட தைரியமும் அதிகாலை இருட்டோடு சேர்ந்துகொள்ள, தன் இடத்தை விட்டு, குரங்குக் குல்லாவை மடித்து காதுவரை இழுத்துவிட்டுக்கொண்டு நின்றிருந்த சுதீர் ரவுத் அருகில் போய் நின்றுகொண்டான்.
Tag - சக்கரம்
ஆரம்பத்தில் தாடியைப் பார்த்து உன்னை மலையாளி என்றுதான் நினைத்தேன். ரோஜியிடம்கூடச் சொன்னேன். பிறகு நீ இங்கிலீஷ் பேசுவதை வைத்துக் கண்டிப்பாக மலையாளியில்லை என்கிற முடிவுக்கு வந்தேன் என்று சொல்லிச் சிரித்தான் ஜேம்ஸ். அவனுக்கு அருகில் வாட்டசாட்டமாக பாடிகார்ட் போல நின்றிருந்த ரோஜி சும்மா இளித்து மட்டும்...
18 இரு திருவனந்தபுரத்திற்குள் நுழைந்ததும் முதலில் தோன்றியது, நகுலன் எங்கே இருப்பார் என்பதுதான். அடுத்ததாக எழுந்தது, ஆ. மாதவன் கடை வைத்திருக்கும் சாலைத் தெரு எங்கே என்பது. எழுத்தாளர்களையாகத் தேடிப்போக நாமென்ன காவிகட்டிக்கொண்டா வந்திருக்கிறோம் என உள்ளூரச் சிரித்துக்கொண்டான். அனுபவம் தேடிப்...
17 ஏளனம் இருள் பிரியும் சமயத்தில் கிளம்புவதற்கான விசிலை அடித்தான் அத்துல் சர்மா. அதற்குச் சற்றுமுன் வந்து சேர்ந்துகொண்டான் இவன். பாபா தேசியக் கொடியை அசைக்க, பாரத் மாதா கீ ஜே எனக் குரலெடுத்துக் கூவியபடி பயணம் தொடங்கிற்று. கும்பலில் என்ன தெரியப் போகிறது என இவன் கூச்சத்துடன் உதட்டை மட்டும் ஒப்புக்கு...
16 புதியதோர் உலகம் எதிரும் புதிருமான எண்ணங்களால் அலைக்கழிக்கப்பட்டு இரவு வெகுநேரம் கழித்துத் தூங்கச் சென்றவன், படுத்ததும் பயணக் களைப்பில் தூங்கிவிட்டான். அப்போதுதான் படுத்ததைப் போலிருந்தது. யாரோ உலுக்கி எழுப்பப் பதற்றத்துடன், என்ன என்ன எனக் குழறியபடி எழுந்து படுக்கையில் உட்கார்ந்துகொண்டு...
15 நரகம் கையைப் பின்னுக்கு இழுத்துக்கொண்டான். சற்று நேரம் அமைதியாக இருந்தவன், ‘நீ பின்னால் உட்கார். நான் ஓட்டுகிறேன்‘ என்றான். ‘இட்ஸ் ஓகே நர்ஸி. நானே ஓட்டுகிறேன்‘ என்றாள் அவள். கொஞ்ச நேரம் ஒன்றும் சொல்லாமல் இருந்தவன், ‘இல்லை. வண்டியை நிறுத்து நான்...
14 இருளும் குளிரும் கடைக்காரர் ஸ்டார்ட் பண்ணிக்கொடுத்த வண்டியில் ஏறி அமர்ந்துகொண்டான். பின்னால் சுஜாதா அமர டிவிஎஸ் 50 ஓட ஆரம்பித்தது. இதற்கு முன்பாக முதல்முறை ஓட்டியபோதும் வசந்தகுமார் ஸ்டார்ட் பண்ணிக்கொடுத்துதான் ஓட்டியிருந்தான். வழியில் வண்டி நின்றுவிட்டால் என்னாவது, இவள் எதிரில் ஸ்டார்ட் பண்ண...
13 சுஜாதா காய்தனி மறுநாள் காலையில் பொடிநடையாகச் சும்மா கடந்து செல்கையில் நீண்ட ஜடையுடன் மூக்குத்தி அணிந்திருந்த லட்சணமான பெண், மணலில் நான்குக் கொம்புகள் நட்டு துணிப் பந்தல் போடப்பட்டிருந்த நிட் இண்டியா நிர்வாக ஆபீஸில் சிவப்பு நிற சுடிதாரில் அமர்ந்திருப்பது தெரியவும் எதோ முக்கியக் காரியம் போல உள்ளே...
12 அறிவுரை விவேகானந்தர் பாறைக்குப் படகுப் பயணம் போய்வந்த பின், தாமதமாக உண்ட மதிய உணவின்போது அன்றைக்கு அவ்வளவுதான். ஓய்வெடுத்துக்கொள்ளலாம் எனச் சொல்லிவிட்டார்கள். உடனடியாகச் சுந்தர ராமசாமிக்கு போன் பண்ணி நாகர்கோவிலுக்கு வருவதாகச் சொன்னான். ‘தாராளமா வாங்கோ. இங்க ஒருத்தர் உங்களைச் சந்திக்க ஆர்வமா...
11 பயிற்சி எண்ண ஓட்டத்திலிருந்து விடுபட்டவன் சுற்றிவர யாரும் இல்லாதது கண்டு ஒன்றுகூட ஒன்றும் சொல்லாமல் போய்விட்டதே எனத் தட்டுடன் எழுந்தவன், எங்குமே ஆட்கள் இல்லாதது கண்டு ஒன்றும் புரியாமல் திகைத்தான். குழாயடிக்குப் போய் தட்டைக் கழுவினான். அதை வைக்க இடமின்றிச் சமையற்கட்டிற்குள் எட்டிப்பார்த்தான். ஒரு...












