2023, என் வருடம் என்று நிறைவாக என்னால் சொல்ல முடியும். இப்படி நான் திடமாகச் சொல்ல எனக்கு வழிகாட்டிய என் ஆசிரியர் பா ராகவனின் பங்கு அளப்பரியது. 2022-ஆம் ஆண்டு தளிர், சூஃபி ஆகும் கலை வெளியீடு முடிந்த கையோடு அடுத்த ஆண்டுக்கான திட்டமிடலை ஆரம்பித்து விட்டேன் என்றால் நம்புவீர்களா..? 2023-ஆம் ஆண்டுக்காக...
Tag - துபாய்
துபாய் என்றதும் ஆயிரெத்தெட்டு விஷயங்கள் நினைவுக்கு வரும். பிரமாண்டமான கட்டடங்கள் கொண்ட ஷேக் ஜாயித் சாலையைக் கடக்காமல் துபாயை யாரும் தரிசித்திருக்க முடியாது. பதினான்கு வழிச் சாலையில் எப்போதும் வாகன நெரிசல் இருக்கும். ஆனால் சென்ற ஞாயிற்றுக்கிழமை அந்தச் சாலையில் ஆரஞ்சு நிறத்தில் மக்கள் வெள்ளம்போல்...
மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி 12 நாள் பயணமாக துபாய் மற்றும் ஸ்பெயின் பயணம் மேற்கொண்டுள்ளார். செப்டம்பர் 12ஆம் தேதி கொல்கத்தாவிலிருந்து துபாய் சென்றார். இந்தப் பயணத்தின் நடுவே துபாய் விமான நிலையத்தில் வைத்து இலங்கை அதிபர் ரணில் விகரமசிங்கேவை சந்தித்தார். இருவரும் என்ன பேசினார்கள் என்பது தான்...
அவர் யார் என்று தெரியாது. அவரது பெயர் தெரியாது. அவரது மொழி தெரியாது. அம்முதிய பெண்மணி தரையில் அமர்ந்து ஒரு கல்லைத் தொட்டுக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார். அக்காட்சியைப் பார்த்த எங்களால் அவரைக் கடந்து செல்ல முடியவில்லை. அம்முதியவர் அமர்ந்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த இடம் துபாய் எக்ஸ்போ...
ஆடம்பரமும் பிரமிப்பும் சூழ்ந்த துபாயில், பழமையையும் பாரம்பரியத்தையும் பாதுகாத்து வரும் எளிமையான இடம் ஒன்று இருக்கிறது. வெளியே அதிகம் தெரியாத, ஆனால் அவசியம் பார்க்க வேண்டிய இடம் அது. துபாயின் அழகிய பக்கத்தைக் கண்டறிய சிறந்த இடம் ‘அல் பஸ்தகியா’ சுற்றுப்புறமாகும். இது அல் ஃபாஹிதி வரலாற்று பக்கம்...
பதினைந்து ஆண்டுகளாகத் துபாயில் வசிக்கிறேன். இத்தனை ஆண்டுகளில் வராத அழைப்பு அன்று வந்தது. அரபித் தோழி ஒருத்தியின் மகனுக்குத் திருமணம். வந்தே ஆக வேண்டும் என்ற அன்புக் கட்டளை வர, நெகிழ்ந்து போனேன். இந்த ஒரு காரணம் போதாதா… போடாமல் வைத்திருந்த ஒன்றிரண்டு நகைகளுக்குப் புத்துயிர் கொடுக்க..? சென்னை...
துபாயில் வீதி நெடுக வண்ண வண்ணப் பூக்களை வைத்து பாலைவனத்தின் வறட்சியை மறைத்துச் சோலைவனமாகக் காட்டுவது வழக்கம். இதற்காகப் பிரத்யேகத் தோட்டக்காரர்களை வேலைக்கு வைத்திருக்கிறார்கள். சாலையோரங்களில் அவர்களைப் பார்க்கலாம். புல்லைப் பிடுங்கிக் கொண்டும், செடிகளை நட்டுக் கொண்டும் பச்சை நிறச் சீருடையில்...
கருங்கற்களால் ஆன தூண்கள், கருங்கல் சிற்பங்கள், அரையிருட்டான கருவறை, சுவரெங்கும் அழுக்கு, குறுக்கே பறக்கும் வவ்வால்கள், கதவெல்லாம் எண்ணெய், கை வைக்கும் இடமெல்லாம் கரி, நூற்றுக் கணக்கான ஆண்டுகளின் பாரம்பரியம், வரலாற்று நெடி என்று பழமை பூசிய புராதனமான ஆலயங்கள் பலவற்றுக்குப் போய் வந்திருப்பீர்கள். ஒரு...
துபாயில் ஒட்டகம் மேய்ப்பது தொடர்பான ஜோக்குகளை எவ்வளவோ கேட்டிருப்போம். உண்மையில் ஒட்டகம் மேய்ப்பது என்றால் என்னவென்று தெரியுமா? தெரிந்துகொள்வோம். பொதுவாக துபாய் நகரத்தைத் தாண்டி சென்றால் வெறிச்சோடிக் கிடக்கும் பாலைவனத்தில் ஒட்டகங்கள் அங்கும் இங்குமாக நின்று கொண்டிருக்கும். சில இடங்களில்...
‘ஸீடிங்’ என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியும். விதைத்தல். ‘க்ளவுட் சீடிங்’ என்றால் என்னவென்று தெரியுமா..? அப்படியே மொழிபெயர்த்து ‘மேகத்தை விதைப்பது அல்லது மேகத்தில் விதைப்பது என்றால் குழப்பும். ஆனால், மேகத்தை மெலிதாக ஏமாற்றுவது எப்படி, அதனால் என்ன பயன் என்பதைத் தெரிந்து கொண்டால் முழுமையாகப்...