32 கை வங்கிக்கு வந்து பார்த்தால் வண்ணதாசன் வீட்டுக்குப் போயிருந்தார். முகவரியை விசாரித்தபடியே அவர் வீட்டுக்குப் போய்ச்சேர்ந்தான். உள்ளே நுழைந்ததுமே சாப்பிட்டீங்களா என்று கேட்டவர், அவன் முகத்தில் இருந்த களைப்பையும் வியர்வையையும் பார்த்துவிட்டு சாப்பிடச்சொன்னார். அதன் பின்னர் ஹாலில் இருந்த சேர்களை...
Tag - நவீன இலக்கியம்
31 போனதும் வந்ததும் குர்த்தாவின் கைகள் இரண்டையும் ஒரே அளவில் இருக்கும்படியாக, நான்கு விரற்கடை அகலத்தில் பட்டையாக மடக்கி மடக்கி முழங்கை முட்டிக்கு மேல் ஏற்றி விட்டால், இலக்கியச் சிந்தனை போன்ற கூட்டங்களில் கேள்வி கேட்க கம்பீரமாக இருக்கிறது என்று ஆரம்பித்த பழக்கத்தில் அன்று மெனக்கெட்டது வம்பாகப்...
30 நாடகம் கதவைத் திறந்த அம்மா, பேயைப் பார்த்தவளைப் போல மிரண்டுபோய், என்னடா இது என்றாள். எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளட்டும் என்பதைப் போல, ‘நாடகம்’ என்று சொன்னபடி வீட்டிற்குள் நுழைந்தான். சட்ட பேண்ட்டெல்லாம் எங்கடா. வந்ததும் வராததுமா ஏன் பிராணனை வாங்கறே. அதான் வந்துட்டேன்ல என்றபடி...
29 வந்துடு உச்சி வெயில் மண்டையைச் சுட்டது. கலைவாணர் அரங்கத்தில் ஏதாவது படம் இருக்குமே என்று தோன்றவே ரிச்சி தெருவிலிருந்து அப்படியே வாலாஜா ரோடுக்காய் போனான். வரிசையில் நின்றிருக்கையில் சென்னை ஃபில்ம் சொசைட்டி சிவக்குமார் தென்படவும் ஹலோ என்றான். என்ன, எதோ கேள்விப்பட்டனே என்றான் அவன்...
தமிழ் மக்களின் வாசிப்பு நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது என்று எல்லா தரப்பினரும் சொல்லிக்கொண்டிருக்கும் வேளையில் புதியதொரு பதிப்பகத்தைத் துணிச்சலாகத் தொடங்கியவர்கள், ஜீரோ டிகிரி ராம்ஜியும் காயத்ரியும். இன்று ஜீரோ டிகிரியை அறியாதவர்கள் யாருமில்லை. குறுகிய காலத்தில் (ஐந்தாண்டுகள்) இந்த...
ரேமண்ட் கார்வர் – தமிழில்: ஜி. குப்புசாமி என் கணவர் வயிறாரச் சாப்பிடுபவர். ஆனால், இப்போது சோர்வாக, சிடுசிடுப்பாகக் காணப்படுகிறார். வாயிலிட்ட உணவை மெதுவாக மென்றுகொண்டிருக்கிறார். மேசை மீது கையை வைத்துக்கொண்டு எதையோ இலக்கில்லாமல் வெறித்துக்கொண்டிருக்கிறார். என்னைப் பார்க்கிறார். உடனே பார்வையைத்...
28 வேட்கையும் பிரசாதமும் மாலையில் ஆபீஸை விட்டுக் கிளம்பி, டிராபிக் குறைந்து சாலையைத் தாண்டி எதிர்ப்புறம் போக வழி கிடைக்கவேண்டி,வண்டி வளாகத்தின் கதவருகில் காத்திருக்கையில், வாயில் சிகரெட் புகைய துச்சமாகப் பார்த்த அந்த முகம் – கருப்புக் கண்ணாடிக்குள்ளிருந்து தெரிந்த, இரவெல்லாம் தூங்கவிடாமல்...
26 விதி ஹலோ என்ன வெள்ளைப் பேப்பரை எல்லாம் கடிதம் என்று அனுப்ப ஆரம்பித்துவிட்டீர்கள் என்று, அனுப்புநர் முகவரியில் அவன் அடித்திருந்த முத்திரையைப் பார்த்துவிட்டு, ஏசி பிரஸாதின் நேரடி லைனிற்கு வந்திருக்கிறார் சாஸ்திரி பவனில் இருக்கிற அந்த அலுவலகத்தின் உயர் அதிகாரி. வெள்ளைத் தாள் வந்ததை அவர்...
25. ஏன் ஆபீஸ் கட்டடத்தை ஒட்டி சற்றே பின்னால் இருந்த கேண்டீனில் காபி வாங்கிக்கொண்டு வந்து, அலுவலகத்தின் பிரதான வாயிலுக்கு எதிரிலிருந்த வருமானவரி அலுவலக தபால் ஆபீஸின் படிக்கட்டில் உட்கார்ந்துகொண்டான். ஏசி பிரசாத் இன்னும் எல்லோரையும் கடித்துக்கொண்டுதான் இருந்தார் என்றாலும் தன் பக்கம் வருவதில்லை...
23 வாழ்வது எப்படி அம்மாவுடன் வாழ முடிந்தால், யாருடனும் வாழ்ந்துவிட முடியும் என்று சமயங்களில் தோன்றும். இத்தனைக்கும் பிறந்தது முதல் அம்மாவுடன் மட்டுமே வாழ்ந்துகொண்டிருப்பவனாக அவன் இருந்தான். அம்மா வழி தாத்தா பாட்டியைப் பார்த்த நினைவே இல்லை. அவனுக்கு மூன்று வயதாகும்போதுதான் அவளுடைய அப்பா...