அல்வா. நாக்கில் ஒட்டிக்கொள்ளும் தித்திப்பு. கையில் ஒட்டாத வழவழப்பு. திருநெல்வேலி அல்வா, கோதுமை அல்வா, அசோகா அல்வா என எல்லா வகை அல்வாக்களுக்கும் நெய்யும் சர்க்கரையும்தான் அஸ்திவாரம். சர்க்கரை தூக்கலாகப் போட்டு நெய்யைத் தாராளமாக விட்டால்தான் வழுக்கிக்கொண்டு விழும் அல்வா பதம் கிடைக்கும்...
Tag - நெய்
நெய் மைசூர் பாகு. கையில் எடுக்கும்போதே பஞ்சு போல நெகிழும். நாக்கில் லேசாக ஒட்டி தொண்டைக் குழிக்குள் நழுவிவிடும். நெய் வாசனையா?, லேசான தித்திப்பா? கடலை மாவின் மென்மையா? -எது இன்னொரு விள்ளலை எடுக்கச் சொல்லும் என்பது தெரியாது. ஒன்று போதும் என்று மூளை சொன்னாலும் நாக்கில் ஒட்டிக்கொண்ட ருசி கையை இயக்கி...
‘திருப்பதி என்றால் லட்டு, பழனி என்றால் பஞ்சாமிர்தம், திருவையாறு என்றாலே அசோகா அல்வா… திருவையாறு ஆண்டவர் ஒரிஜினல் நெய் அல்வா கடை, எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை.’ என்று ஏற்ற இறக்கங்களுடன் பேசும் விளம்பரம் திருச்சி வானொலியில் அடிக்கடி வரும். அசோகா என்பது பாசிப்பருப்பை மூலமாக வைத்துச்...
விருந்தாளிகள் வந்தால் சமையலில் வடை பாயசம் நிச்சயம் இருக்கும். பாயசம் போல சிரமமில்லாமல் செய்யக்கூடிய இனிப்பு பிறிதொன்றில்லை. சிலர் கேசரி கிளறிப் போடுவர். அதற்கும் மேலே போய் எதற்கு வம்பு என்று கடையில் வாங்கி சபையில் வைத்து விடுவோரும் உண்டு. ஆனால் ஒருமுறை அத்தாட்டி வீட்டிற்குப் போனபோது பால்...
இசை, நடனம், ஓவியம், வில்வித்தையில் இருந்து ஆடை அலங்காரம், சிகை அலங்காரம் வரை எல்லாமே கலை என்று முன்னர் பிரித்து வைத்தனர். இன்றோ புகைப்படம் எடுப்பது, திரைப்படம் எடுப்பதில் இருந்து ஆரம்பித்து ரோபோடிக்ஸ், கோடிங் வரை பலவற்றையும் கலைகளின் வரிசையில் சேர்த்து விட்டார்கள். செய்யும் செயல் எதுவாயினும் அதை...