ஸ்ரீ சித்த கங்கா மடம். கர்நாடகத்தின் தும்கூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற இடம். பாறைகளாலும், குன்றுகளாலும் சூழப்பட்ட இராமலிங்க, சிவகங்கே மலைத் தொடர்கள். 15-ஆம் நூற்றாண்டிலிருந்து லிங்காயத்தவர்களின் மத போதனைகள் கற்பிக்கப்பட்டு வரும் ஆசிரமம். இங்கு தான் கர்நாடகாவின் ஆட்சி அரியணையைப் பற்றிய முக்கிய...
Tag - பாரதிய ஜனதா கட்சி
தேர்தல் பத்திரங்கள் (Electoral Bond) தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பு சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது. இந்தத் திட்டம் சட்டத்திற்குப் புறம்பானதெனவும் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கே எதிரானதெனவும் திட்டவட்டமாகச் சொல்லியிருக்கிறார்கள். உச்ச...
தமிழ்நாட்டு அரசுக்கும் ஆளுநருக்கும் இடையிலான உறவு எப்படிப்பட்டது என்பது குழந்தைகளுக்கும் தெரியும். நாளொரு அறிக்கை, பொழுதொரு சொற்பொழிவு என்று ஆளுநர் தம்மாலான அனைத்து விதங்களிலும் தமிழ்நாட்டுப் பெரும்பான்மை மக்கள் விரும்பாத விவகாரங்களைத் தொடர்ந்து பேசி வருவதும் அனைவரும் அறிந்தது. பதிலுக்கு பாரதிய...
கடந்த பிப்ரவரி மூன்றாம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை திருமலையில் (திருப்பதி) சநாதன தார்மிகக் கருத்தரங்கம் என்ற பெயரில் மூன்று நாள் மாநாடு ஒன்று நடைபெற்றது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஜீயர்கள், மடாதிபதிகள், சாதுக்கள் ஏராளமானோர் இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டார்கள். கருத்தரங்கில் பல்வேறு...
பளிங்கு போன்ற நீலப்பச்சை நீர், தூய வெள்ளை மணற்பரப்பு, தென்னை மரங்கள் தலை சாய்ந்து பார்க்கும் கடற்கரை – இவைதாம் கல்பேனித் தீவின் அடையாங்கள். சென்ற ஆண்டு டிசம்பரில் அங்கு சென்றார் மோடி. அரபிக்கடலின் விளிம்பில், நாற்காலி போட்டு அமர்ந்து யோசித்தார், கருப்பு உடையில் வெள்ளை மணலில் கால் புதைய...
மீண்டும் ஒரு உச்சநீதி மன்றத் தீர்ப்பு பேசுபொருளாகியிருக்கிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தைக் கடந்த 2019ம் ஆண்டு மத்திய அரசு நீக்கியதை அடுத்துத் தொடரப்பட்ட வழக்குகளில் நேற்று உச்சநீதி மன்றம் தனது தீர்ப்பை வெளியிட்டிருக்கிறது. அரசின் நடவடிக்கை சரியே என்பது...
விவசாயிகளுக்கு எதிரான போக்கைக் கடைப்பிடிக்கும் தமிழக அரசைக் கண்டிக்கிறோம். மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசைக் கண்டிக்கத் தவறும் தமிழக அரசைக் கண்டிக்கிறோம். கச்சத்தீவுக்காக மத்திய அரசுக்கு அழுத்தம் தராத தமிழக அரசைக் கண்டிக்கிறோம். பேனா நினைவுச் சின்னத்துக்குக் கண்டிக்கிறோம். மின் கட்டண உயர்வுக்குக்...
அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்துக்கு நடைபெற இருக்கும் பொதுத் தேர்தலுக்கு ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் தீவிரமாக ஆயத்தமாகி வருகின்றன. எதிர்க்கட்சிகள் தம்மை வலுப்படுத்திக்கொள்வதிலும், ஆளும் பாஜக எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்துவதிலும் மும்முரமாக இருப்பதை உணர முடிகிறது. அமலாக்கத்துறை ரெய்டு...
இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர்கள் பிகாரில் கூடி ஆலோசனை செய்துள்ளார்கள். ஆளும் கட்சிக்கு எதிராக அணி திரட்டும் நிகழ்வு பிகாருக்குப் புதிதல்ல. கட்சி மாறி இருக்கிறதே தவிர காட்சி மாறவில்லை. ஆளுங்கட்சியை எதிர்த்துப் பேசினால் உடனே சிறைவாசம். அரசின் அத்தனை அமைப்புகளும் பாய்ந்து...
இந்தியாவின் தனிச் சிறப்பு என்பது இங்குள்ள பல்வேறு விதமான பண்பாட்டு அடையாளங்களும் கலாசாரச் செழுமையும். அவை தமது தனித்தன்மையை விட்டுத் தராமல், அதே சமயம் ஒரு தேசமாக இதைக் கட்டியெழுப்பிக் காப்பதிலும் சமரசமற்று இருப்பதுதான் இதில் முக்கியமானது. சுதந்தரத்துக்குப் பிறகு சமஸ்தான ஒருங்கிணைப்பு நடைபெற்றது...