மெஸ்ஸியின் வருகையில் என்ன எதிர்பார்க்கப்பட்டதோ, அதற்கு முற்றிலும் மாறான பிம்பம் இந்தியாவைப் பற்றி இணையத்தில் பரவத் தொடங்கிவிட்டது. ஹைதராபாத், மும்பை நிகழ்வுகளில் கொல்கத்தா அளவுக்குப் பிரச்சனைகள் இல்லை. ஆனால் கால்பந்துக்கு அவை நியாயம் சேர்த்ததா என்பது கேள்விக்குறியே. உண்மையில் இச்சிக்கல்களுக்கு யார்...
Tag - விளையாட்டு
ஒருவர் தனது எழுபதாவது வயதில் இன்னும் புரொஃபஷனல் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறார். ஐம்பது ஓவரும் மைதானத்தில் நின்று விக்கெட்களும் எடுத்துக் கொண்டிருக்கிறார் என்றால் நம்புவீர்களா? தனிமனித விளையாட்டுகளில் கூட முதிர்ந்த வயதிலும் விளையாடி சாதனை படைத்தவர்கள் என்று ஒரு நீண்ட பட்டியல் உண்டு. மரியா...
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றிருக்கிறது. இப்போட்டியில் இங்கிலாந்தை விட அநாயாசமாக பாஸ்பாலை நிகழ்த்திக் காட்டியது ஆஸ்திரேலியா. தற்காலிகக் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தின் வியூகங்களும் சிறப்பாக இருந்தன. பாட் கம்மின்ஸின் வருகை தாமதமானாலும், அது குறித்த...
நடந்து முடிந்த மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்போட்டியில் இந்தியா தென்னாப்பிரிக்காவை வென்று, முதன்முறையாக உலகக் கோப்பையைக் கைப்பற்றிச் சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் நனவானது இந்த அணியின் கனவு மட்டுமல்ல, இந்த ஒரு நாளுக்காக முப்பத்து ஏழு வருடங்களாகக் காத்திருந்த ஒருவரின் கனவும் கூட. அவர்தான் இந்திய...
மல்யுத்தம் என்பது ஆயுதங்கள் எதையும் பயன்படுத்தாது தங்கள் பலத்தை மட்டுமே பயன்படுத்தி இருவர் போரிடுவது. இதிகாசங்களிலேயே மல்யுத்தம் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக மகாபாரதத்தில் பீமன், துரியோதனன் போன்றவர்கள் சிறந்த மல்யுத்த வீரர்கள். போரிடுவதற்கு மட்டுமல்லாது மல்யுத்தம் நீண்டகாலமாக ஒரு வீர விளையாட்டாகவும்...
இன்றைக்குக் கிரிக்கெட்டில் நடுவர்களாகச் செயல்பட்டு வருவோர், ஒருமுறையேனும் தங்களது சர்ச்சைக்குரிய தீர்ப்பால் வீரர்களின் அதிருப்தியைச் சம்பாதித்திருப்பார்கள். ஆனால் ஒருமுறைகூட அதுபோன்ற புகாரை எதிர்கொள்ளாத ஒரு நடுவரும் இருந்தார். எழுபது, எண்பதுகளின் கிரிக்கெட் ரசிகர்களுடைய மனங்களில் நீங்கா...
பிராட் பிட் நடித்த F1 படமும் வந்துவிட்டது. இதை F1 ரசிகர்கள் பார்த்ததைவிட, முந்தைய தலைமுறையின் பிராட் பிட் ரசிகர்கள் பார்த்துவிட்டு F1 பக்கம் திரும்பியதே அதிகம்.
வெற்றி தோல்வி எது வந்தாலும் பெங்களூரு அணியை இத்தனை வருடங்களாகத் தாங்கிப் பிடித்து வந்த அந்த அணியின் ரசிகர்கள் இந்த வெற்றியைக் கொண்டாடித் தீர்த்தனர்.
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மேலும் இரண்டு பக்கங்கள் புரண்டுள்ளன. நவீன கிரிக்கெட் உலகின் ஐகான்களாகிய ரோஹித் ஷர்மாவும், விராட் கோலியும் ஒரு வார இடைவெளியில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளனர். இந்த முடிவுகளின் பின்னணியும், எதிர்காலத்தில் இந்திய டெஸ்ட் அணியில் ஏற்படுத்தப் போகும்...
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் திருவிழாவின் 18ஆவது சீசன் தொடங்கிவிட்டது. உலகின் இரண்டாவது மிகப் பணக்கார விளையாட்டுப் போட்டி ஐபிஎல். கிரிக்கெட், இந்தியாவின் பிரதான மதமாக மாறிய 2000களின் பிற்பகுதியில் தொடங்கப்பட்டது இது. முதலில் இந்தியாவுக்குள் மட்டும் பிரபலமான ஒரு கிளப் கிரிக்கெட்...












