ஆப்கனிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முத்தாக்கி, அக்டோபர் 9ஆம் தேதி அரசு முறைப் பயணமாக இந்தியா வந்திருந்தார். இந்தியா-ஆப்கன் இடையேயான ராஜதந்திர, பொருளாதார, கலாசார உறவுகளைப் பற்றி அவர் டெல்லியில் பேசிக்கொண்டிருந்தபோது, பாகிஸ்தானின் போர் விமானங்கள் காபூலில் தாக்குதல் நடத்திக்கொண்டிருந்தன.
இது தெஹ்ரிக்-இ-தாலிபன் பாகிஸ்தான் (TTP) என்ற தீவிரவாதக் குழுவின் மீதான தாக்குதல் எனப் பாகிஸ்தான் தரப்பில் கூறப்பட்டது. இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆப்கனின் தாலிபன் படைகள், எல்லையில் இருந்த பாகிஸ்தானின் ராணுவ நிலைகளின் மீது துப்பாக்கிச்சூடு மற்றும் பீரங்கித் தாக்குதலைத் தொடங்கின. பாகிஸ்தானும் ட்ரோன்களைக் கொண்டு தாக்கியது. சாமன் (Chaman) நுழைவுப் பாதை மூடப்பட்டது.
பாகிஸ்தானின் 25 ராணுவ நிலைகளைக் கைப்பற்றியதாகவும், 58 ராணுவ வீரர்களைக் கொன்றுவிட்டதாகவும் தாலிபன்கள் அறிவித்தனர். ஆனால், பாகிஸ்தான் இந்த எண்ணிக்கையை மறுத்தது. டுராண்ட் எல்லைக்கோடு (Durand Line) நெடுகப் போர்க்களமானது. ஆப்கனிஸ்தானில் ஆட்சியிலிருக்கும் தாலிபன்களையும், பாகிஸ்தானிலுள்ள தீவிரவாதக் குழுவான தெஹ்ரிக்-இ-தாலிபன்களையும் ஒரே கோட்டில் இணைப்பது இந்த டுராண்ட் எல்லைக்கோடுதான்.














Add Comment