மொழி, காலம் தோறும் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இங்கே பேசப்பட்ட தமிழை இன்று பேசினால் நமக்குப் புரியாது. ஈராயிரம் வருடங்களுக்கு முந்தைய இலக்கியங்கள் இன்றும் நம்மிடம் இருக்கின்றன. ஆனால் உரையுடன் தான் படிக்கிறோம். மொழியின் அடையாளமே வேறாகத் தெரிகிறது. எப்படி இது நிகழ்கிறது? சென்ற நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகள் வரை தனித்தமிழாகப் புழங்கி வந்தது. பிறகு வடமொழிச் சொற்கள் தமிழில் கலந்தன. பிறகு ஆங்கிலம் கலக்கத் தொடங்கியது. வரிசையாகப் பல மொழிகள் ரகசியமாகத் தமிழுக்குள் நுழைந்தன. இன்றைய தலைமுறையின் தமிழில் ஆங்கிலம் அதிகம் கலக்கிறது. அதன் வடிவமே வேறாக இருக்கிறது. இதுவும் ஒருநாள் மாறத்தான் செய்யும். உலகம் உருண்டை அல்லவா? நிற்க. அன்றிலிருந்து இன்று வரையிலான தமிழ் உரைநடை எப்படியெல்லாம் மாறி வந்திருக்கிறது என்று கொஞ்சம் பார்ப்போம்.
இதைப் படித்தீர்களா?
சுதந்திரம் அடைந்து எழுபத்தெட்டு வருடங்களை நிறைவு செய்யவிருக்கும் ஒரு மாபெரும் ஜனநாயக நாட்டின் மாநிலங்களுள் ஒன்று, மாநில சுயாட்சி குறித்துத் தனது சட்ட...
2008ஆம் ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களில் தொடர்புடைய தஹாவுர் ராணாவை அமெரிக்காவிலிருந்து பாதுகாப்பாக நாடு கடத்தியுள்ளனர் இந்திய...
நேரடியாக ஆங்கிலத்தை கலந்தால் கூட பரவாயில்லை.அது நம் காலம்.இனி அதைவிட மோசமாக தமிழை ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள்’sagikavillai’.