Home » தமிழகத் தேர்தல் களம்: என்ன நடக்கிறது? என்ன நடக்கப் போகிறது?
தமிழ்நாடு

தமிழகத் தேர்தல் களம்: என்ன நடக்கிறது? என்ன நடக்கப் போகிறது?

தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகளின் தலைமையில் மூன்று கூட்டணிகள், தனித்து நிற்கும் நாம் தமிழர் கட்சி எனத் தமிழகத்தின் ஒவ்வொரு தொகுதியிலும் நான்கு முனைப் போட்டி என்ற சூழல் உருவாகியிருக்கிறது. ஏப்ரல் 19-ஆம் தேதியே முதல் கட்டமாகத் தமிழகத்திற்கும் வாக்குப்பதிவு நடக்குமென அறிவித்திருக்கிறது தேர்தல் ஆணையம். இதன் மூலமாகத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்திருக்கின்றன. தமிழகத்தில் ஒவ்வொரு கூட்டணியிலும் தற்போதைய நிலை என்ன? எந்தக் கட்சி எந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வோம்.

தி.மு.க. தலைமை:

தி.மு.க. – 21, காங்கிரஸ் – 9+1(புதுச்சேரி),, இந்திய கம்யூனிஸ்ட் – 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – 2, விடுதலைச் சிறுத்தைகள் – 2, மதிமுக – 1, மக்கள் நீதி மையம் – 1 (ராஜ்ய சபா), கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சி- 1, மனித நேய மக்கள் கட்சி என வலுவான கூட்டணியை அமைத்திருக்கிறது திமுக. பிற கூட்டணிக் கட்சிகள் இன்னும் பேச்சுவார்த்தை அளவில் நிற்க முதலாவதாகக் கூட்டணியை இறுதி செய்து மேற்சொன்னவாறு தொகுதிகளின் எண்ணிக்கையையும் இறுதி செய்திருக்கிறது. எந்தக் கட்சி எந்தத் தொகுதிகளில் போட்டியிடுகிறது என்பது கூட கிட்டத்தட்ட முடிவு செய்து விட்டது. தேர்தலை எதிர்கொள்ள அடுத்தகட்டப் பணிகளைத் தொடங்க தயாராகக் களத்தில் நிற்கிறது தி.மு.க. கூட்டணி. தேர்தல் தேதி அறிவிப்பும் வேட்பாளர் பட்டியல் வெளியீடும் மட்டுமே மிச்சமிருக்கிறது.

அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் பலமாக இருக்கும் கொங்கு மண்டலத்தின் தேர்தல் பொறுப்புகளை உதயநிதியிடம் ஒப்படைத்திருக்கிறது தி.மு.க. தலைமை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!