பிப்ரவரி 12 அன்று பங்களாதேஷ் பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில் பங்களாதேஷ் தேசியக் கட்சி (Bangladesh Nationalist Party) மகத்தான வெற்றியைப் பெற்றது. BNPஇன் தலைவர் தாரிக் ரஹ்மான், பங்களாதேஷின் பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார். பதினேழு ஆண்டுகள் லண்டனுக்கு நாடு கடத்தப்பட்டிருந்த தாரிக், சென்ற 2025 டிசம்பர் 25 அன்று தாய்நாடு திரும்பினார். தாரிக் ரஹ்மானைக் குறித்துப் பார்ப்பதற்கு முன், பங்களாதேஷ் அரசியலின் முக்கிய ஆளுமையான அவரது தந்தை ஜியாவுர் ரஹ்மான் குறித்துப் பார்த்துவிடுவோம்.
1970 டிசம்பர் 7 அன்று அப்போதிருந்த ஒருங்கிணைந்த பாகிஸ்தானில் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அதில் கிழக்கு பாகிஸ்தானில் (இன்றைய பங்களாதேஷ்) ஷேக் முஜிபுர் ரஹ்மானின் அவாமி லீக் கட்சி மாபெரும் வெற்றியடைந்தது. அது போட்டியிட்ட 162 இடங்களில் 160 இடங்களைக் கைப்பற்றியது. மத்தியில் ஆட்சியில் அமர பெரும்பான்மையைப் பெற்றிருந்தது.
மேற்கு பாகிஸ்தானில் அலி புட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி (Pakistan Peoples Party) 138 இடங்களில் 81 இடங்களை வென்றிருந்தது. ஷேக் முஜிபுர் ரஹ்மான் தலைமையிலான அரசாங்கத்தைப் புட்டோ மறுத்தார். மேற்கு பாகிஸ்தான் ராணுவமும் அதை வழிமொழிந்தது.















Add Comment