Home » ஆட்டநாயகன் To அரசியல் கைதி
உலகம்

ஆட்டநாயகன் To அரசியல் கைதி

இம்ரான் கான்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் வலது கண்ணில் 85 சதவீதப் பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ராவல்பிண்டி சிறையில் உள்ள அவரது உடல்நிலை குறித்து உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் ரத்த உறைவு காரணமாக (CRVO – Central Retinal Vein Occlusion) அவருக்குப் பார்வைக் குறைபாடு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, இம்ரான் கானுக்கு விரிவான மருத்துவப் பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

​1992ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றது. இந்த வெற்றி, அணியின் கேப்டனாக இருந்த இம்ரான் கானுக்குப் பெரும் மக்கள் செல்வாக்கை ஏற்படுத்திக் கொடுத்தது. 1996ஆம் ஆண்டு ‘பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப்’ (PTI) என்ற கட்சியைத் தொடங்கினார். கிரிக்கெட் மூலம் கிடைத்த செல்வாக்கு அரசியலில் வெற்றிபெறப் போதுமானதாக இல்லை. 1997ஆம் ஆண்டு தேர்தலில் அந்தக் கட்சி படுதோல்வியடைந்தது.

​சுதந்தரப் பாகிஸ்தானின் அரசியல் வரலாறு இரு குடும்பங்களைச் சார்ந்திருந்தது. முதலாவது, நிலப்பிரபுத்துவப் பின்னணி கொண்ட புட்டோ குடும்பம். இவர்கள் சிந்து இனத்தைச் சேர்ந்தவர்கள். அடுத்தது, தொழிலதிபர்களான ஷெரீப் குடும்பம். இவர்கள் பஞ்சாபி இனத்தைச் சேர்ந்தவர்கள். இந்த இரு குடும்பங்களையும் எதிர்த்து வெற்றிபெற இம்ரான் கான் 22 ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது. பல தியாகங்களையும் மாற்றங்களையும் செய்ய வேண்டியிருந்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!