1789ஆம் ஆண்டு குடிமக்கள் உரிமைகள் பிரகடனம் கொண்டுவரப்பட்டதிலிருந்து பேச்சு சுதந்திரத்தை மிகவும் மதிக்கும் நாடாக பிரான்ஸ் விளங்குகிறது. ஆகஸ்டு 2024இல் அஜர்பைஜானிலிருந்து தனது சொந்த விமானத்தில் பாரிஸ் வந்திறங்கிய பாவெல் டுரோவ் உடனே கைது செய்யப்பட்டார். இந்தக் கைது, அவர் தன்னிடம் கோரப்பட்ட தகவல்களை அரசாங்கத்துடன் பகிர மறுத்ததால் நடந்தது. கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான இந்த நடவடிக்கை உலகளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. யார் இந்த பாவெல்?
பாவெல் டுரோவ் 10, அக்டோபர் 1984இல் சோவியத் யூனியனின் லெனின்கிராட் (இப்போதைய செயின்ட் பீட்டர்ஸ்பர்க்) நகரில் பிறந்தார். தனது குழந்தைப் பருவத்தின் பெரும்பகுதியை இத்தாலியின் துரின் நகரில் கழித்தார். அங்கு அவருடைய தந்தை கல்லூரிப் பேராசிரியராகப் பணியில் இருந்தார். பாவெலின் தாத்தா இரண்டாம் உலகப் போரில் போராடி, பல விருதுகளைப் பெற்றவர். பாவெலின் தாய்வழி சொந்தங்கள் இன்றும் உக்ரைன் நாட்டில் இருக்கிறார்கள்.
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மாநில பல்கலைக்கழகத்தின் மொழியியல் பீடத்தில் பட்டம் பெற்றவர் பாவெல் டுரோவ். 2006ஆம் ஆண்டு தனது வகுப்புத் தோழர்கள் இருவரைச் சேர்த்து அவர் தொடங்கியது விகாண்டக்டே (VK). இந்தச் சமூக வலைத்தளத்தின் மென்பொருளை எழுதியது பாவெல்லின் அண்ணன் நிகோலாய் டுரோவை. அடுத்த சில ஆண்டுகளில் மிகப் பெரிய வளர்ச்சியைக் கண்டது விகாண்டக்டே. இன்றும் ரஷ்யாவில் அதிகமானோர் பயன்படுத்தும் சமூகவலைத்தளமாக விளங்குகிறது. இதன் வளர்ச்சியைக் கண்டு கலங்கிய ரஷ்ய அரசாங்கம் அழுத்தம் கொடுக்கத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து 2014ஆம் ஆண்டு நிறுவனர் பதவியிலிருந்து விலக்கப்பட்டர் பாவெல். சில மாதங்களிலேயே நாட்டைவிட்டும் வெளியேறினார்.
Add Comment