பல்லைப்பார்த்து பதிலைச்சொல்
டிசம்பர் மாதம் என்றாலே நமக்கு உள்ளூர பயப்பந்து உருளத்தொடங்கிவிடுகிறது. சில டிசம்பர் மாதங்கள் நம்மை அப்படிப் படுத்தி எடுத்திருக்கின்றன. ஈராறு வருடங்களுக்கு முந்தைய டிசம்பர் மாதமது. அது நம் மனங்களில் விட்டுச்சென்ற வடு இன்னும் ஆறவில்லை.
நாட்டின் தலைநகரம். நண்பனுடன் பேருந்துக்காகக் காத்திருந்தாள் இளம் மருத்துவ மாணவியொருத்தி. அச்சமயத்தில்தான் வந்தது அந்தத் தனியார்ப் பேருந்து. தாங்களும் அவ்வழியேதான் செல்வதாக அவர்களை நம்பவைத்துப் பேருந்தில் ஏற்றிக்கொண்டார்கள். அதில் இவர்களைத்தவிர்த்து, ஓட்டுநர் உள்பட ஆறுபேர் இருந்தனர். பேருந்து திடீரெனத் தடம் மாறியது.
சந்தேகமடைந்த மாணவியின் நண்பன் வாக்குவாதம் செய்ததால் அவர்கள் தாக்கத்தொடங்கினர். இருவரையும் கடுமையாகத் தாக்கியபின் அப்பெண்ணை அறுவரும் வன்புணர்ந்தனர். கொடிய வன்புணர்ச்சி அது. எழுதத் தரமில்லாதது. இறுதியில் அப்பெண்ணும் ஆணும் அரைகுறை ஆடைகளுடன் பேருந்திலிருந்து தூக்கிவீசப்பட்டனர்.
முற்றிலும் இதுவரை கேள்விப்படாத புதிதான forensic odontology பற்றித் தெரிந்து கொண்டேன். ஹிட்லர் முதல் டெட் பண்ட்,நிர்பயா வரை எப்படி காலம் தன் கோரைப் பற்கள் காட்டி சிரித்திருக்கின்றன என்பதை அறிந்துகொண்டேன்.
எல்லாம் படித்து முடித்த பின்னர் கண்ணாடி முன் நின்றேன், நான்கு வெட்டுப் பற்கள்,இரண்டு கோரைப் பற்கள் ,நான்கு முன் கடைவாய்ப் பற்கள்,எட்டு பின் கடைவாய்ப் பற்கள் காட்டி சிரித்துப் பார்த்தேன். ஆதி மனிதனின் முகம் கண் முன்னே.ஞானப் பல்லை தேடிக்கொண்டிருக்கையில் தொலைக்காட்சியில் pepsodent விளம்பரத்தில் ஒருவர் பல்லைக் காட்டி சிரித்தபடி இருந்தார்.