5. என்புதோல் போர்த்த உடம்பு
கரூர் மாவட்டத்திலுள்ள சிற்றூரில், 2006ஆம் ஆண்டின் மத்தியில் நடந்த சம்பவம் இது. வாழைத்தோப்பில் குழிதோண்டச்செய்தார் அதன் உரிமையாளர். புதுக்கன்றுகள் நடுவதற்குத் தயாராக அருகில் இருந்தன. வேலையாள்கள் மண்ணை அள்ளியபோது, மண்வெட்டியில் துணியொன்று மாட்டிக்கொண்டு வந்தது. மண்ணை மேலும் விலக்கியபோது எலும்புக்கூடொன்று கிடப்பது தெரிந்தது.
உரிமையாளர் அளித்த தகவலின்பேரில், காவல் ஆய்வாளர் எலும்புக்கூட்டைப் பார்வையிட்டார். அது புடைவையும் வெள்ளிக்கொலுசுகளையும் மெட்டிகளையும் அணிந்திருந்தது. தடயவியல் அதிகாரிகளைக்கொண்டு முதற்கட்டத் தடயவியல் ஆய்வு நிகழ்த்தப்பட்டது. ஆய்வில், பெண்ணொருத்தியின் எலும்புக்கூடென உறுதி செய்யப்பட்டது. வயது சுமார் முப்பத்தைந்து இருக்கலாம்.
இறந்து, ஏறத்தாழ ஒன்றரை வருடங்கள் ஆகியிருக்கலாம். கடந்த ஈராண்டுகளில் அவ்வூரின் காவல்நிலையத்தில் பதிவான வழக்குகள் ஆராயப்பட்டன. அதில் பெண் காணாமல்போன வழக்கு ஒன்றுதான் இருந்தது. அதைத்தொடர்ந்து, அப்பெண்ணின் கணவர் வரவழைக்கப்பட்டார். எலும்புக்கூட்டின் ஆடை, ஆபரணங்கள் தன்னுடைய மனைவியுடையதுதான் என்று அவர் உறுதிசெய்தார்.
Add Comment