Home » எதுவும் உடனே மாறாது!
உலகம்

எதுவும் உடனே மாறாது!

நடந்து முடிந்த தாய்லாந்து தேர்தலில் பூம்ஜாய்தாய் கட்சி வெற்றிபெற்றுள்ளது. பிப்ரவரி எட்டாம் தேதி தேர்தல். கையோடு வாக்கு எண்ணிக்கை. மொத்தம் இருக்கும் ஐந்நூறு இடங்களில் நானூறு பிரதிநிதிகளை மக்கள் தேர்ந்தெடுக்கவேண்டும். அவர்கள் ஒன்றுகூடிப் பிரதமரைத் தேர்ந்தெடுப்பார்கள்.

53 மில்லியன் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள். ஐம்பதுக்கும் அதிகமான கட்சிகள். இருப்பினும் தேசிய அளவில் கவனம் பெற்றது மூன்று கட்சிகள்தான். பூம்ஜாய்தாய் கட்சி, முற்போக்கு மக்கள் கட்சி, பியூ தாய் கட்சி. கருத்துக்கணிப்புகள் பெரும்பான்மை வெற்றி யாருக்கும் கிடைக்காது என்றே கணித்திருந்தன.

தேர்தலுக்கு முன் பொறுப்பு பிரதமராக இருந்தவர் அனுட்டின் சார்ன்விராக்குன். இவரது பூம்ஜாய்தாய் கட்சிக்குப் பெரும்பான்மைக்குத் தேவையான 251 இடங்கள் கிடைக்கவில்லை. இருப்பினும் தற்போதைய நிலவரப்படி 193 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் இம்முறையும் அனுட்டின் பிரதமராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!