ஆப்பிரிக்கக் கண்டத்தின் வடகிழக்குப் பகுதியில் சூடான், லிபியா, எகிப்து ஆகிய மூன்று நாடுகளும் சந்திக்கும் பாலைவனப் பகுதி ‘முக்கோண எல்லைப்பகுதி’ எனவும், ‘தீ முக்கோணம்’ என்றும் அழைக்கப்படுகிறது. இது வெப்பப் பாலைவனங்களால் சூழப்பட்ட மனித நடமாட்டமில்லாப் பகுதி. கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, தங்கச் சுரங்கங்கள் நிறைந்து செழித்திருக்கும் பகுதி இது. அரசியல் நிலையற்ற தன்மை மற்றும் போராட்ட ஆயுதக் குழுக்களின் ஆதிக்கத்தால் போர்க்களமாகவும், பெருங்குற்றக் கொலைக்களமாகவும் மாறியிருக்கிறது இந்தத் தீ முக்கோணம்.
லிபியாவை 42 ஆண்டுகள் ஆட்சி செய்தவர் கர்னல் முஅம்மர் அல் கதாஃபி. 2011ஆம் ஆண்டு கதாஃபி சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு லிபியாவில் அரசியல் வெற்றிடம் உருவானது. அதேநேரத்தில் சூடானின் தார்பூர் சாட் மற்றும் மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் ஏற்பட்ட கலவரங்களும் லிபியாவைப் பெருமளவில் பாதித்தன. அந்த அரசியல் குழப்பங்கள், ஆயிரக்கணக்கான சிறு சுரங்கத் தொழிலாளர்களுக்குச் சாதகமாக மாறின. அவர்கள் தங்கச்சுரங்கங்களுக்காக முக்கோண எல்லைப்பகுதிக்குள் ஊடுருவினர். தொடர்ந்து தங்கச்சுரங்கங்கள் பெருமளவு சூறையாடப்பட்டன.















Add Comment