சிதம்பரத்தில் நடராஜர் ஆனந்தத் தாண்டவம் ஆடியது தெரியும். அதே ஸ்தலத்தில் பிரம்மா விஷ்ணு முன்னிலையில் அவருக்கு இணையாகச் சக்தியும் ஆடிய கதை தெரியுமா?
ஒரு முறை சிவன், சக்தி இருவருக்குமிடையே தங்களில் யார் சக்தி மிக்கவர் என்கிற விவாதம் ஏற்பட்டது. பேச்சு வார்த்தை முற்றி கடும் சண்டையாக உருமாறியது. சிவன் மிகுந்த கோபம் கொண்டார். அழகான பார்வதி தேவியை கோரமான காளியாகத் தோன்றும்படி சபித்தார்.
சிவபெருமான் வெறும் சண்டைக்காக மட்டும் அப்படிச் சபிக்கவில்லை. பார்வதி தேவி, காளியாக மாற வேண்டிய தேவை இருந்தது. கோபமான காளி கொடியோரை வேரறுத்து நல்லோரைக் காப்பதற்கான வடிவமாகும்.
Add Comment