Home » தீபத்தூணா? மானஸ்தம்பமா?
தமிழ்நாடு

தீபத்தூணா? மானஸ்தம்பமா?

கடந்த கார்த்திகை தீபத்திருநாள் அன்று திருப்பரங்குன்றத்தில் ஒரு சர்ச்சை வெடித்தது. முருகன் கோவில் அமைந்திருக்கும் மலை மீதிருக்கும் ஒரு தூணில் தீபம் ஏற்றவேண்டும் என்று இந்து அமைப்புகளின் சார்பில் ஒரு குழு கிளம்பியது. காவல்துறை தடுத்தது. சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அந்தக் குழுவினர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், இந்து சமய அறநிலையத்துறை அந்தத் தூண் சமணர்கள் உருவாக்கிய தூண் என்று குறிப்பிட்டது. தொடர்ந்து இந்த வழக்கு நடைபெற்று வருகிறது.

வழக்கு ஒருபுறமிருக்க, உண்மையிலேயே சமணர்கள் மதுரைக்கு வந்திருந்தார்களா? சமண மதம் தமிழகத்தில் பரவியிருந்ததா? சமணர்கள் யார்? இப்போதும் அவர்கள் இருக்கிறார்களா? விரிவாகப் பார்க்கலாம்.

சமணம் இந்தியாவில் தோன்றிய பழைமையான சமயங்களில் ஒன்று. சமணச் சமயம் வேதகாலத்துக்கும் முற்பட்டது என்று ஒரு நம்பிக்கை உண்டு. பிராகிருத மொழியில் ஸமண என்று அழைக்கப்பட்ட சொல்லே ‘சிரமண’ என்று சமஸ்கிருத மொழியில் மாறி வழங்கியது. தமிழில் அமணர் அல்லது சமணர் என்று புழங்குகிறது. துறவிகள் என்று அச்சொல்லுக்குப் பொருள். துறவு பூண்டவர்களுக்கே சொர்க்கம் கிடைக்கும் என்று சமயம் வற்புறுத்துவதால் அப்பெயர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!