சுப்ரா சுரேஷ்
இந்திய-அமெரிக்க விஞ்ஞானியும் கல்வியாளருமான சுப்ரா சுரேஷ், தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். மும்பையில் பிறந்த இவர், தனது பள்ளிப் படிப்பையும் கல்லூரிப் படிப்பையும் தமிழ்நாட்டில் முடித்தார்.
பதினைந்து வயதிலேயே பள்ளிப் படிப்பை முடித்து சென்னை ஐஐடியில் இயந்திரப் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றபோது இவருக்கு வயது இருபத்தொன்று.
அயோவா மாநிலப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும், மசாசூட்ஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் முனைவர் பட்டமும் பெற்றார். முனைவர் பட்ட ஆய்வுக்காக இவருக்கு வழிகாட்டியாக இருந்தவர் பேராசிரியர் இயன் ரிட்சி. சுப்ரா சுரேஷ்தான் அவருக்கு முதல் ஆய்வு மாணவர். இருவரும் இணைந்து செய்த ஆராய்ச்சியின் முடிவுகள் முன்னணி ஆய்விதழ்களில் வெளியிடப்பட்டு அறிவியல் உலகால் பாராட்டப்பட்டன.










Add Comment