“மீம் பாக்க இன்னோரு வசதி. அவ்வளவு தானங்க…” என்று பளிச்சென்று கூறினார் அன்பர் ஒருவர். மெட்டாவின் த்ரெட்ஸ் குறித்த அவரது ஒட்டுமொத்த அபிப்பிராயம்தான் இது. ட்விட்டருக்குப் போட்டியாகக் களமிறக்கப்பட்டிருக்கும் த்ரெட்ஸ்தான் இப்போதைக்கு சோஷியல் மீடியாவின் பரபரப்பு. இலான் மஸ்க்கும் மார்க் ஜக்கர்பெர்க்கும்தான் இந்தச் சண்டைச் சேவல்களின் முதலாளிகள். ஆடுகளம் இப்போது சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது.
ஜூலை ஆறாம் தேதி அதிகாலையிலேயே டிஜிட்டல் பக்த கோடிகள் த்ரெட்ஸ்ஸின் வைகுந்த வாசல் திறப்புக்குக் காத்திருந்தனர். இன்ஸ்ட்டாகிராமில் இருப்பவர்களுக்கு ஒரு அதிவிரைவு தரிசன வழியை ஏற்படுத்தித் தந்திருந்தது மெட்டா. த்ரெட்ஸ் மற்றும் இன்ஸ்ட்டா இரண்டுமே அவர்களுடையது என்பதால்.
Add Comment