Home » புது வீடு பிரிண்ட் பண்ணலாமா?
அறிவியல்-தொழில்நுட்பம்

புது வீடு பிரிண்ட் பண்ணலாமா?

டேனியல் ஓமருக்கு அப்போது வயது பதினான்கு. தெற்கு சூடானின் சிறிய மலைக் கிராமம் நூபாவில் இருந்தான். அங்கு இரண்டாயிரத்துப் பனிரெண்டில் கடுமையான வான்வெளித் தாக்குதல் நடந்தது. டேனியலின் இரண்டு கைகளும் அத்தாக்குதலால் சிதைந்தது. கைகளை இழந்து எதுவுமே செய்ய முடியாமல் வாழ்வதற்குப் பதிலாய், தான் இறந்து போயிருக்கலாமென டைம் பத்திரிகை நிருபரிடம் மனம் வெதும்புகிறான் டேனியல்.

மைக் எபிலிங் ‘நாட் இம்பாஸிபில்’ (Not Impossible) என்றொரு ஸ்டார்ட்டப் நிறுவனர். லாஸ் ஏஞ்சல்ஸில் உடல் குறைபாடுடையோருக்கான கருவிகளைத் தயாரித்து வந்தார். எபிலிங் மூன்று குழந்தைகளின் தந்தையும்கூட. டேனியலுக்கு நடந்த இச்சோகத்தை அந்த இளம் தந்தையால் எளிதில் கடந்து செல்ல முடியவில்லை. தங்களின் 3D பிரிண்ட்டர்களுடன் சூடான் செல்கின்றார். 3D பிரிண்ட்டர்கள் மூலம் பிராஸ்தடிக் கைகளை உருவாக்குகிறார். டேனியலுக்குப் பொருத்துகிறார். தொழில்நுட்பம் உருவாக்கித் தந்த மாயக் கரங்கள் டேனியலின் வாழ்வில் புத்தொளி கூட்டுகிறது. டேனியல் மீண்டும் தனது கைகளாலேயே எடுத்து உணவை உண்ண முடிகிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!