Home » மீண்டு வந்த முந்நூறு ரத்தினங்கள்
வரலாறு

மீண்டு வந்த முந்நூறு ரத்தினங்கள்

பிப்ரஹ்வா

புத்தரின் புனித பிப்ரஹ்வா நினைவுச்சின்னங்கள் 127 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த நினைவுச்சின்னங்களில் புத்தரின் சாம்பல், எலும்புகள், மாணிக்கம், மரகதம், நீலமணிகள், தங்கத் தகடுகள் முதலியன அடக்கம். இது பெருமைக்குரிய சாதனை என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். திருப்பிக் கொண்டு வரப்படவில்லை, ஓர் இந்திய நிறுவனத்தால் விலைக்குத்தான் வாங்கப்பட்டிருக்கின்றன என்கின்றன செய்திகள். பிப்ரஹ்வா நினைவுச்சின்னங்கள் என்றால் என்ன? எந்த வகையில் அவை புத்தருடன் தொடர்புடையவை? ஏன் அவை வெளிநாட்டுக்குச் சென்றன?

சித்தார்த்தன் என்ற பெயரோடு பிறந்த இந்து இளவரசர் அவர். வாழ்வுக்கான வினாக்களைத் தேடி லௌகீக வாழ்க்கையிலிருந்து வெளியில் வந்தார். போதி மரத்தடியில் ஞானம் பெற்று, புத்தர் என்ற பெயர் சூடி, பௌத்த மதத்தைத் தோற்றுவித்தார். தனது எண்பதாவது வயதில் கி.மு.483ல் குசினகரத்தில் (இப்போது குஷிநகர், உத்தரப் பிரதேசம்) காலமானார்.

துறவறத்தில் இருந்ததால் அவருக்குச் சொந்தமான செல்வங்கள் என்று ஏதும் இல்லை. ஆனால் பௌத்த மதத்தைப் பரப்புவதற்காகவும், அதன் வளர்ச்சிக்காகவும் அப்போது இருந்த மன்னர்களும், செல்வந்தர்களும் விலையுயர்ந்த ஆபரணங்களை நன்கொடையாக வழங்கினர். இவற்றில் தங்கம், வெள்ளி, மாணிக்கம், கோமேதகம், நீலமணிகள் போன்ற விலையுயர்ந்த கற்களும் அடக்கம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!