Home » வெல்வாரா வால்ஸ்?
உலகம்

வெல்வாரா வால்ஸ்?

கமலா - டிம் வால்ஸ்

விவாத மேடையின்றி, பரப்புரை இன்றி, நிதி திரட்டல் இன்றி அதிபர் வேட்பாளராகிவிட்டார் கமலா ஹாரிஸ். அவரோடு சேர்ந்து அமெரிக்காவை வழிநடத்தத் துணை அதிபர் வேட்பாளரைத் தேடும் வேலை மிச்சம் இருந்தது. தனக்கு இணையாகத் தன் கொள்கைகளுடன் ஒத்துப்போகும் ஒருவரை, ராகமும் தாளமுமாக இணைந்து செயல்படும் ஒருவரைத் தேர்ந்தெடுப்பது வழக்கம். அதே நேரம், வெற்றிக்கான மதியூகமும் நிறைந்திருக்க வேண்டும். கடந்த சில வாரங்களாக நடந்த தேடல் முடிவுக்கு வந்துவிட்டது. டிம் வால்ஸ் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஜாஷ் ஷப்பீரோ, பீட் புடாஜட்ஜ், மார்க் கெல்லி போன்ற பலர் பட்டியலில் இருந்தார்கள். ஜோஷ் ஷப்பீரோ, பென்சில்வேனியா ஆளுநர். யூதர். இஸ்ரேலின் ஆதரவாளராக அறியப்படுபவர். தன்னைவிட பலம் வாய்ந்தவராகக் கருதப்படுவாரோ என்ற சின்ன அச்சத்தால் கடைசியில் அதிபர் வேட்பாளரான கமலாவால் ஓரம் கட்டப்பட்டார். எப்போதுமே தலைவரைவிடக் கீழே பணி செய்பவர், சற்றே பலம் குறைந்தவராக இருத்தல் அழகு!

மக்களிடையே பலராலும் அறியப்படாத அதே நேரம், இருகட்சித் தலைவர்களிடையே நல்ல மதிப்புடைய டிம் வால்ஸை(Tim Walz) த் தன் இணையாகத் தேர்ந்தெடுத்தார். ஏழைப் பங்காளன். மிதவாதி. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்கிற மென்பேச்சாளர். டிரம்பிற்கு பதிலடி கொடுக்கக்கூடியவர். மென் நகைச்சுவையும் கூடியவர். முன்னாள் இராணுவப் படைவீரர். பொருந்திவரும் தகுதிகள். பத்துக்குப் பத்துப் பொருத்தமும் இருக்கிறது என்று முன்னாள் அதிபர்கள் கிளிண்டன், ஒபாமா, பைடன் முதற்கொண்டு, ஆசிரியர்கள், தொழிற்சங்கத் தலைவர் வரை ஆலோசனை கூறியிருக்கிறார்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்