Home » காதலிக்க வலதுபுறம் தள்ளவும்
அறிவியல்-தொழில்நுட்பம்

காதலிக்க வலதுபுறம் தள்ளவும்

சுயம்வரம், கந்தர்வ விவாஹம், குடும்பத்திற்குள் பெரியோர்கள் முடிவு செய்வது என்று பல வகைத் திருமண ஏற்பாடுகள் நம் நாட்டில் இருந்திருக்கின்றன. இன்றைக்குப் பல நாடுகளில் நிலைமை முதலில் காதல், திருமணத்தைப் பின்னர் பார்க்கலாம் என்று மாறத் தொடங்கிவிட்டது. இதற்கு ஒரு படி மேலே போய் திருமணங்களின் எண்ணிக்கையே வேகமாகக் குறைந்து வரும் ஜப்பான் நாட்டில் அரசாங்கமே தரகர் சேவையை வழங்கிவருகிறது. இத்தகைய நவீனச் சுழலில் தங்களின் துணைவர்களைத் தேட உதவுவதில் உலகளவில் முன்னணியில் இருப்பது ‘டிண்டர்’ செயலி!

இணையம் தொடங்கிய காலம் தொட்டே காதலும் காமமும் அதில் வரத் தொடங்கிவிட்டது. உதாரணமாக 1993ஆம் ஆண்டில் வந்த மாட்ச் (Match.com) என்கிற தளத்தில் காதலர்களைத் தேடி அவர்களோடு தொடர்பு கொள்ளலாம். இதைப் போலவே அடுத்த இருபது ஆண்டுகளில் பல தளங்கள் வெளிவந்து, ஓரளவு வெற்றியும் பெற்றன. ஆனால் 2012ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலஸில் நடந்த ஒரு சடுதி மென்பொருள் ஆக்க (hackathon) போட்டியில் உருவாக்கப்பட்ட மேட்ச்பாக்ஸ் செயலி வந்த வேகத்திலேயே முழுச் சந்தையையும் கைப்பற்றியது. அப்போதிருந்த செயலிகளைவிடப் புதியவர்களைச் சந்தித்து, காதல் தொடர்புகளை உருவாக்குவதை எளிதாகச் செய்தது மேட்ச்பாக்ஸ்.

இதை உருவாக்கியவர் சீன் ராட் என்கிற ஈரானிய அமெரிக்கர். அவருக்கு உதவியது பொறியாளர் ஜோ முனோஸ் என்பவர். போட்டி முடிந்த கையோடு சீன் ராட் தனது நண்பரான ஜஸ்டீன் மாட்டீனோடு இணைந்து இதைத் தொழிலாகச் செய்யத் தொடங்கினார். முதல் முதலாக 2004ஆம் ஆண்டு தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கணித வகுப்பில் பார்த்ததிலிருந்து இருவரும் நெருங்கிய நண்பர்கள். அடுத்த சில ஆண்டுகளில் ஐபோன் வந்த போது “உன் வாழ்வையே இது மாற்றிவிடும்” என்று சொல்லி அதை அறிமுகம் செய்தார் சீன். இந்தத் தாக்கத்தாலோ என்னவோ பின்னாளில் ‘டிண்டர்’ (Tinder) என்று பெயர் மாறிய மேட்ச்பாக்ஸ் செல்பேசிகளுக்கான செயலியாக மட்டுமே பல ஆண்டுகள் வழங்கப்பட்டது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!