Home » திறக்க முடியாத கோட்டை – 24
திறக்க முடியாத கோட்டை தொடரும்

திறக்க முடியாத கோட்டை – 24

24 – வாரிசு இல்லாத வல்லரசு

20-பிப்-2014. சுதந்திர சதுக்கம், கீவ், உக்ரைன்.

குறி தவறாமல் சுடும் ஸ்நைப்பர்கள் சதுக்கத்தைச் சுற்றி வளைத்தனர். முக்கியப் போராளிகள் ஐம்பது பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சற்று நேரத்தில் எண்ணிக்கை இருமடங்கானது. ஆம்புலன்ஸ்களிலேயே பரலோகம் சென்றடைந்த ஆன்மாக்கள் ‘பரலோக நூற்றுவர்’ என்று அழைக்கப்பட்டனர். இருப்பினும் போராட்டத்தை இது நிறுத்திவிடவில்லை. ரத்த பூமி சுத்தம் செய்யப்பட்டு, தடுப்புகள் வைக்கப்பட்டன. கற்கள், செங்கற்கள், துப்பாக்கிகள் எனக் கையில் கிடைத்தவையெல்லாம் மக்களின் ஆயுதமாகின. மூன்றுமாத யூரோமெயின் போராட்டம், உக்ரைனின் தன்மானத்திற்கான போராட்டமானது.

பாராளுமன்றத்தைக் கைப்பற்றவில்லை என்றாலும், போராட்டத்தின் நோக்கம் நிறைவேறியது. இடைக்கால அரசு அமைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் உக்ரைன் அதிபர் விக்டர் யனுக்கோவிச். பின்பு ரஷ்யாவில் காணாமல் போனார். அவர் போட மறுத்த கையெழுத்தே, இந்தப் போராட்டத்தைத் தொடங்கி வைத்தது. ஐரோப்பிய ஒன்றியத்தின் 28 நாடுகளோடு உக்ரைனும் ஐக்கியமாகும் ஒப்பந்தம் அது. அரசியல் கொள்கைகள், நாட்டின் சட்டங்கள், பொருளாதாரம் என சகலமும் இனி மேற்குலகக் கலாசாரப்படி நடைபெறும். மக்களின் பேராதரவோடு இது நிறைவேறியது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!