ஒவ்வொரு கட்சியும் அவரவருக்கு ஏற்ற வழியில் மக்களின் மனங்களில் தங்களது கருத்துகளைத் திணித்துக்கொண்டிருக்கின்றன. ஏப்ரல் 19-ஆம் தேதிக்கு இன்னும் ஒன்பது நாட்களே மிச்சம். அரசியல் சூடு குறைந்து ஆசுவாசமடையத் தமிழக மக்களும் ஆர்வமாக இருக்கிறார்கள்.
தினந்தோறும் அரசியல் செய்திகள் மட்டுமே அனைத்து ஊடகங்களிலும் நிரம்பி வழிகின்றன. எப்படிப் பார்த்தாலும் தி.மு.க. கூட்டணியின் கைகள் ஓங்கியிருப்பதாகப் பொதுவான கருத்தொன்று உருவாகியிருக்கிறது. எப்படி பா.ஜ.க. மத்தியில் ஆட்சியமைக்கும் என்னும் கருத்து தீவிரமாக இருக்கிறதோ அப்படி. இப்போது யார் இரண்டாமிடம் என்பதற்குத்தான் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.விற்கு இடையிலான போட்டி. நாம் தமிழர் கட்சியும் அனைத்துத் தொகுதிகளிலும் களமிறங்கியிருக்கிறது என்றாலும் அடிப்படைக் கட்டமைப்புகள் பலமாக இருக்கும் கட்சிகளைத் தனியாக எதிர்த்து வெற்றி பெறுவது சாத்தியமில்லை. இப்போது நடக்கும் தேர்தலுக்கும் அவர்களுக்கும் ஏதும் சம்பந்தமிருப்பதாகத் தெரியவில்லை.
கட்சிகள் முதல் வாக்காளர்கள் வரை அனைத்து தரப்பினரும் மிக ஆர்வமாக எதிர்பார்க்கும் நட்சத்திரத் தொகுதிகளின் நிலவரம் என்னவென்று தெரிந்துகொள்வோம். அதன் மூலமாக ஒட்டுமொத்த தமிழக அரசியல் களநிலவரத்தை ஓரளவு புரிந்துகொள்ள முடியும்.
Add Comment