Home » ‘தல’ புராணம் -2
தல புராணம்

‘தல’ புராணம் -2

பெப்சி ராணி

சென்ற ஆண்டில் ஒருநாள். அலுவலகத்தில் நானும் எனது சக ஊழியரும் பணி சம்பந்தமாகப் பேசிக் கொண்டிருந்தோம். நாங்கள் அமர்ந்திருந்த மேஜைக்கு எமது நிறுவனத்தின் சட்ட வல்லுநர்களில் ஒருவர் வந்து எம்மிருவரிடமும் பேச வேண்டுமென்றார். நாங்களும் எமது நான்கு செவிகளையும் அவர் சொல்லப் போவதைக் கேட்கத் தயாராக்கினோம்.

“நீங்கள் இருவரும் தெரிவு செய்த ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திடமிருந்து இன்னும் என்.டி.ஏ (Non Disclosure Agreement இன் சுருக்கம்) கையெழுத்துப் போடப்பட்டு வரவில்லை. நான் அதை அனுப்பி ஒரு வாரத்துக்கும் மேலாகி விட்டது. அந்நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியிடம் அதை அவசரமாக அனுப்பும்படி கேட்கிறீர்களா..? அது வரும்வரை நாங்கள் அவர்களுடன் எந்தவிதமான ப்ராஜக்ட் சம்பந்தமான விபரங்களும் பகிர முடியாது என்பதை உங்களுக்கு நினைவூட்டுகிறேன்.” இது தான் அந்த சட்ட வல்லுநர் பெண்மணி ஆங்கிலத்தில் சொன்னதன் சாராம்சம்.

நாங்களிருவரும் பதில் சொல்லாமல் புன்னகைத்தோம். அவர் குழம்பி விட்டார்.

“சிரிக்கும்படியாக அப்படி எதை நான் சொல்லி விட்டேன்?” என்று ஆச்சரியம் கலந்த பார்வையுடன் கேட்டார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!