இதுவரை இல்லாதவகையில் அமெரிக்கத் தேர்தலிலும் மக்களுக்கு நிதி அளிக்க ஆரம்பித்துவிட்டார்கள். எலான் மஸ்கின் அறிவிப்பு விதிகளுக்குள் அடங்குமா இல்லையா என நாடே சட்டப் புத்தகங்களைப் புரட்டிப் புரட்டிப் படிக்கிறது. ஆளாளுக்குப் பொழிப்புரை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
எனக்கு எதிராகப் பேசுபவர்கள் எவராயினும் அவர்களைப் பழி வாங்குவேன், அவர்கள் மீதும் அமெரிக்க நீதித் துறையின் மீதும் இராணுவ நடவடிக்கைகள் எடுப்பேன் – இது ஏதோ காவியங்களில் வரும் கதாபாத்திரங்களின் கற்பனைச் சூளுரைகள் அல்ல. நவீன அமெரிக்காவில், குடியரசுக் கட்சியின் வேட்பாளரான முன்னாள் அதிபர் நாளொன்றுக்கும் உதிர்க்கும் பொன்மொழிகள்.
வந்தேறிகளின் மரபணுக்களிலேயே கொலை செய்யவும் குற்றம் செய்யவும் குறியீடுகள் இருக்கின்றன எனச் சொல்லி அதிக நாளாகவில்லை.
ஏற்கெனவே மெக்சிகோவில் தன் டெஸ்லா வாகன உற்பத்தியகம் தொடங்கி அதிக நஷ்டத்தைச் சந்தித்த எலான் மஸ்க், மீண்டும் அப்படி ஒரு நஷ்டத்தைச் சந்திக்கத் தயாரில்லை. ஜனநாயகக் கட்சியினர் வென்றாலும் யாரையும் பழிவாங்குவதில்லை. எனவே டிரம்ப்பின் குணமறிந்து, தைரியமாக டிரம்ப்பை ஆதரிக்கலானார். அதுவும் எப்படி? 120 மில்லியன் நிதியை சூப்பர் விளம்பரங்களுக்காகச் செலவிட்டும் டிரம்ப்போடு பேரணிகளில் தோளோடு தோள் நின்றும். இவை அமெரிக்கத் தேர்தல் விதிகளோடு ஒத்து இருந்தன.
Add Comment