பசுவுக்கெல்லாம் நீதி கொடுக்க ஆள் இருந்த உலகம் இது. இன்று, ஒரு முன்னாள் அதிபர், ஜூரிகளால் குற்றவியல் வழக்குகளில் குற்றவாளி என நிரூபணம் ஆகித் தண்டனைக்குக் காத்திருக்கும் போது, அதைப் பறிக்கும் வகையில், இல்லை… மக்களாட்சி நடந்தாலும், அதிபர், அரசர், மக்கள் இயற்றிய சட்டத்திற்கு அப்பாற்பட்ட ஆண்டவர் என்று சொல்லியிருக்கிறார்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள். ஆறு நீதிபதிகளுக்கு மூன்று பேர் என்ற வகையில் அமெரிக்க அதிபர், தனது ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் உட்பட்ட அலுவலக நடவடிக்கையில் எடுக்கப்பட்ட முடிவுகளில் வழக்குகளுக்கு அப்பாற்பட்டவராகிறார் எனக் கூறியிருக்கிறார்கள். ஆனால் எது அரசு அலுவல் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் எது தனிப்பட்ட நடவடிக்கைகள் என்பதை மாநில, கீழ் நீதிமன்றங்கள் தீர்மானிக்க வேண்டும்.
காபிடல் ஹில்லின் மீதான தாக்குதலை நடத்தத் திட்டமிட்ட வழக்கில் தனக்கு முழு இம்யூனிட்டி கேட்டு முன்னாள் அதிபர் டிரம்ப் தொடுத்த சட்ட மசோதாவை வாஷிங்டன் கீழ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதை உச்ச நீதிமன்றம் விசாரிக்கக் கோரினார்.
முன்னர், அதிபர் நிக்சனுக்கும் ஃபிட்ஸ்ஜெரால்டிற்குமான 1982-இல் நடந்த உரிமையியல் வழக்கில் அதிபர் நிக்சனுக்கு உச்ச நீதிமன்றம் முழு விலக்கு அளித்திருந்தது. ஆனால், அது அதிபர் என்ற அதிகாரத்திற்கு அப்பாற்பட்ட விவகாரங்கள் குறித்தானது.
அதே போல அதிபர் கிளிண்டனுக்கும் பாலா ஜோன்ஸுக்குமான பாலியல் தொடர்பான வழக்குகளில் (1997-இல் நடந்த வழக்குகள்) கிளிண்டனுக்கு எந்த விலக்குகளும் அளிக்கப்படவில்லை. ஆனால், இதுவரை எந்த அதிபருமே பதவியில் இருந்த வரை எந்தக் குற்றவியல் வழக்குகளிலும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படவில்லை. எந்தக் கீழ்த்தரமான செய்கைகளிலும் ஈடுபடவும் இல்லை.
Add Comment