Home » ஓமனில் தமிழ் பிராமி
தமிழர் உலகம்

ஓமனில் தமிழ் பிராமி

இந்தியத் தேசிய ஆவணக் காப்பகம் சார்பில் சில வாரங்களுக்கு முன்பு கண்காட்சி ஒன்று நடத்தப்பட்டது. அதில் இந்தியாவுக்கும் ஓமனுக்கும் இடையேயான பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான உறவின் ஆதாரங்களைக் காட்சிப்படுத்தியிருந்தார்கள். பல தலைமுறைகளாக அங்கே தங்கியிருந்தவர்களின் கதைகள், தனிப்பட்ட நாள்குறிப்புகள், அவர்களிடமிருந்த கோப்புகள் என அனைத்தும் சேமிக்கப்பட்டு, முக்கியமானவை கணினிமயமாக்கப்பட்டன. ஏழாயிரத்திற்கும் அதிகமான இந்தி, தமிழ், மலையாளம், குஜராத்தி மொழிகளில் கோப்புகள், குறிப்புகள் இவர்களால் சேமிக்கப்பட்டுள்ளன. இந்தியாவுக்கு வெளியே இந்தியத் தேசிய ஆவணக்காப்பகம் முன்னெடுத்த முதல் பணி இதுதான்.

தமிழ்ப் பிராமி வெட்டெழுத்துகள் கொண்ட பானை ஓடுகள், ஓமனின் கார் ரோரி பகுதியில் 2006ஆம் ஆண்டு இத்தாலிய நிறுவனம் நடத்திய அகழ்வாராய்ச்சியில் கிடைத்தன. முதலில், அது எவ்வகை எழுத்து வடிவம் என்பதை அவர்களால் அறியமுடியவில்லை. அது கேரளாவில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் வைக்கப்பட்ட போது, அவை தமிழ்ப் பிராமி வடிவம் என்பதை உறுதி செய்ய முடிந்தது. அந்தப் பானை ஓட்டின் காலம் முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்குமென்றும், தமிழ் வணிகருக்குச் சொந்தமான உடைமையாக இருக்கலாம் என்றும் பதிவுசெய்திருக்கிறார்கள். தமிழ் – வணிகத் தொடர்பின் காலம் இதன் மூலம் நிரூபணமாகியிருக்கிறது.

அரபு நாடுகளிலேயே மிகப் பழமையானது, மற்றவற்றை விட சற்றே வித்தியாசமானது ஓமன். அரபு நாடுகளுக்குள் தகராறுகள் வரும்போதும், அவர்கள் ஒன்று கூடி வேறு நாட்டுடன் மல்லுக்கு நிற்கும் போதும் சரி, ஓமன் எப்போதுமே அமைதியை விரும்பும். கடல் வணிகம், எண்ணெய் வளம் என அனைத்தும் இருந்தும், தலைநகர் மஸ்கட்டிலும், பிற இடங்களிலும் இன்றளவிலும் விண்ணைத் தொடும் கட்டிடங்கள் இருக்காது. இவர்களது கலை நயம் மிக்க கோட்டைகளுக்கு அவை என்றும் ஈடாகாது. வணிகத் துறைமுகங்கள், வரி இல்லா மண்டலங்கள், சரக்கு இருப்பு பகுதிகள் என அனைத்து வசதிகளுடன் ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளுக்கு இடையில் வணிகப் பாலமாக இருப்பதும் ஓமன் தான். உலக நாடுகளிலிருந்து பலரும் தொழில் தொடங்க ஆர்வம் காட்டுவது, அங்கே வருமானவரி இல்லை என்பதற்காக மட்டுமில்லை, அடுத்த இருபது ஆண்டுகளுக்கு அவர்கள் தொழில்நுட்பம் சார்ந்து வளர்ச்சிப் பணிகளில் கவனம் செலுத்தவுள்ளனர் என்பதினாலும்தான்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!