ஜெர்மனியின் ஹம்பர்க் பல்கலைக்கழகத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு தமிழ் இலக்கியம் சார்ந்து மிக முக்கியமான பணி ஒன்று தொடங்கப்பட்டது. அடுத்த இரு தசாப்தங்களுக்கு, அதாவது 2047ஆம் ஆண்டு வரை திட்டமிடப்பட்டுள்ள இந்த நெடும் பணியில் சங்க இலக்கியங்கள் மின்னணு மயமாக்கப்படவுள்ளன. அதோடு அவை மொழி பெயர்க்கப்பட்டுப் பிற நாட்டு ஆராய்ச்சியாளர்களுக்கு உதவும் வகையில் இருக்கவேண்டும் என்பதுதான் பேராசிரியர் ஈவா வில்டனின் நோக்கம். தமிழெக்ஸ் என்னும் பெயரில் மின்னிலக்கப் பேரகராதியும் தயாராகிறது. பல கோடி ரூபாய் செலவில் இதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன.
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஜெர்மனியில் தமிழ் சார்ந்து ஏதேனும் ஓர் ஆராய்ச்சி அல்லது கற்றலுக்கான முன்னெடுப்புகள் நிச்சயம் இருக்கும். அவர்கள் கார்களையும் மதுபானங்களையும் தயாரிப்பதில் மட்டும் வல்லவர்கள் அல்ல, புத்தகப்பிரியர்களும் கூட. பதிப்புத்துறை சார்ந்து தொன்மையான வரலாறு உடையவர்கள் ஜெர்மானியர்கள்.
‘எனது துறையில் இணைய விரும்பும் மாணவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட திராவிட மொழிகளை கற்றிருக்க வேண்டும். அதில் தமிழ் தெரிந்திருக்கவேண்டியது கட்டாயம்.’
Add Comment