அமெரிக்க அதிபர் தேர்தல் களேபரங்களுக்குச் சற்றும் குறையாத பரபரப்புடன் துருக்கி அதிபர் தேர்தலும், பாராளுமன்றத் தேர்தலும் நடந்து ஓய்ந்திருக்கிறது. எழுபது ஆண்டுகாலப் பனிப்போரே ஒளிந்திருந்த இம்மாபெரும் தேர்தல் திருவிழாவில் அமெரிக்காவும், மேற்கு ஊடகங்களும் ஆறு கட்சிகளுடன் கலக்கல் கூட்டணி அமைத்த முன்னாள் அக்கவுண்டனும், தோற்றம், மற்றும் மென்மையான பேச்சு என்பவற்றுக்காக ‘துருக்கியின் காந்தி’ என்று அழைக்கப்படுவருமான கமல் கிளிக்ட்ரோலுவை ஆதரித்தன.
ரஷ்யா அதிபர் புட்டினோ ஆரவாரமில்லாமல் அதிபர் ரஜப் தையிப் எர்டோகனுக்கு லைக் போட்டுக் கொண்டிருந்தார். கை குலுக்கினார். பிசினஸ் பேசினார். சந்தித்துக் கொண்டார். ‘ரஷ்யா, அதிபர் எர்டோகனை ஆதரிக்கிறது’ என்று எதிர்க்கட்சிகள் சீறின. ஆனால் புட்டின் பத்திபத்தியாய் கமெண்ட்ஸ் எதுவும் எழுதவில்லை. ‘நோ’ என்றார். அவ்வளவுதான்…
exhaustive effort. superb