Home » பிரிட்டன் தேர்தல்: லேபர் வார்டில் சுகப்பிரசவம்
உலகம்

பிரிட்டன் தேர்தல்: லேபர் வார்டில் சுகப்பிரசவம்

கீயர் ஸ்டார்மர்

ஜூலை 04-ஆம் தேதி நடைபெற்ற பிரித்தானியத் தேர்தலில் மக்கள் ஒரு தெளிவான முடிவைக் கொடுத்தார்கள். இது ஏற்கெனவே பல அரசியல் அவதானிகளாலும் கருத்துக் கணிப்பெடுப்புகளாலும் எதிர்வு கூறப்பட்ட முடிவுதான். ஆனாலும் லேபர் கட்சிக்கு இப்படியொரு அறுதிப் பெரும்பான்மை வெற்றி கிடைக்குமா என்பது சந்தேகமாகவே இருந்தது.

மொத்தம் அறுநூற்றைம்பது தொகுதிகளில் நானூற்றுப் பன்னிரண்டு தொகுதிகளைக் கைப்பற்றி லேபர் கட்சி தேர்தலில் அமோக வெற்றி கண்டது. கன்சர்வேடிவ் கட்சிக்குக் கிடைத்தது நூற்று இருபத்தொரு தொகுதிகள் மட்டுமே. அவர்கள் முன்னிருந்த நிலையுடன் ஒப்பிடும் போது அவர்கள் இழந்தது இருநூற்று ஐம்பத்தொரு தொகுதிகள். இது வரலாற்றில் இடம் பிடிக்கும் பெரும் தோல்வியாகும்.

லேபர் கட்சி பெற்ற இப்பெரும் வெற்றியில் ஒரு தமிழ்ப் பெண்ணும் பங்கேற்றுள்ளார். ஸ்ராட்ஃபோர்ட் அண்ட் போ தொகுதியில் வெற்றி பெற்ற இப்பெண்ணின் பெயர் உமா குமரன். இவரது பெற்றோர்கள் இலங்கையிலிருந்து அகதிகளாக இங்கிலாந்தில் குடியேறியவர்கள். இவர் பிறந்தது லண்டனின் கிழக்குப் பகுதியில். லண்டன் பல்கலைக் கழகத்தின் குயீன் மேரி கல்லூரியில் அரசியல் துறையில் பட்டதாரியானர். பின்னர் பொதுச் சேவைத் துறையில் முதுநிலைப் பட்டமும் பெற்றார்.

இவர் பலவிதமான பொதுச் சேவைப் பணிகளில் இருந்துள்ளார். லண்டன் மேயரின் ஆலோசகராகவும், பின்னர் லேபர் கட்சித் தலைவர் சேர் கீயர் ஸ்டார்மரின் பாராளுமன்ற அலுவல்கள் குழுவில் டெபுடி டைரக்டராகவும் பணியாற்றியுள்ளார். அண்மைக் காலத்தில் சூழல் மேலாண்மைக் குழுவிலும் பணியாற்றியுள்ளார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!