Home » இது வேற தீம்!
சுற்றுலா

இது வேற தீம்!

ஐரோப்பாவின் முதல் யுனிவர்சல் தீம் பார்க், இங்கிலாந்தில் அமைக்கப்படவுள்ளது. இச்செய்தி பொழுதுபோக்கு விரும்பிகளையும், சுற்றுலாப் பயணிகளையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இப்பெரும் திட்டம், பிரிட்டனின் பொருளாதாரத்திற்கும், சுற்றுலாத் துறைக்கும் புதிய உத்வேகத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லண்டனுக்கு வடக்கே முப்பது மைல் தொலைவில் அமைந்துள்ள பெடிங்டன் பகுதியில் ஐந்நூறு ஏக்கர் பரப்பளவில் இந்தப் பிரம்மாண்ட தீம் பார்க் உருவாக இருக்கிறது. யுனிவர்சல் டெஸ்டினேஷன் யுகே மற்றும் கோம்காஸ்ட் நிறுவனங்கள் இணைந்து, சுமார் 4.7 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்கிறார்கள். இது பிரிட்டனின் வரலாற்றில் மிகப்பெரிய பொழுதுபோக்குத் துறை முதலீடாகும். நாட்டின் பொருளாதார நிலைப்பாட்டிற்கும் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமையும் என்று அரசு நம்பிக்கையாக உள்ளது.

பெடிங்டன் பகுதி இத்திட்டத்திற்குத் தகுந்த இடமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்குப் பல காரணங்கள் உள்ளன. லண்டன், பர்மிங்காம், மான்செஸ்டர் போன்ற பிரிட்டனின் முக்கியமான நகரங்களிலிருந்து எளிதில் அணுகக்கூடிய தூரத்தில் இருப்பது முதன்மைக் காரணம். மேலும், ஒரு பிரம்மாண்ட தீம் பார்க்கிற்குத் தேவையான நிலப்பரப்பு இங்கு உள்ளது. மோட்டார்வே மற்றும் ரயில் வழித்தடங்களுடன் ஏற்கனவே சிறந்த போக்குவரத்து இணைப்புகளைக் கொண்டிருப்பதும் காரணம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்