ரஷ்யப் போர் விமானி: “ப்ரெஸ்ட் டவர், இது Ka-52. புறப்பட தயாராக ஓடுதளம் 27ல் உள்ளது. அவசரப் புறப்பாடு. அனுமதி வேண்டும்.”
ப்ரெஸ்ட் டவர்: “Ka-52, புறப்பட அனுமதிக்கிறோம். ஓடுதளம் 27, 30 நாட்ஸில் காற்றின் வேகம் 90. எச்சரிக்கை, சுகோய் விமானம் தரையிறக்கத்தில் உள்ளது.”
அனுமதி கிடைத்தவுடன் புறப்பட்டது ரஷ்யாவின் Ka-52. இலக்கு – உக்ரைன் தலைநகர் கீவிற்கு 10கிமீ அருகிலிருந்த ஆன்டோனோவ் விமான நிலையம். உலகிலேயே பெரிய சரக்கு விமானமான An-225 இங்குதான் நின்றிருந்தது. முதல் ஏவுகணை அங்கிருந்த நிர்வாகக் கட்டடத்தில் வெடித்திறங்கியது. தொடர்ந்து நாடெங்கும் கேட்டது வெடிச் சத்தம். தொடங்கியது ரஷ்யாவின் யுத்தம்.
u can write a spy thriller mam..well done