Home » உக்ரைன் எனும் பலியாடு
உலகம்

உக்ரைன் எனும் பலியாடு

ஒரு முட்டாளுக்கு வழிகாட்டி, சிறகுகளையும் தந்துவிட்டால், அவனது முன்னேற்றம் உறுதி. குண்டுகளில்கூட கெட்டிக்காரக் குண்டுகள், முட்டாள் குண்டுகள் என்று உண்டு. விமானத்திலிருந்து வீசப்பட்ட பின்பு எந்தக் கட்டுப்பாடுமின்றி, தன்பாட்டுக்கு நினைத்த இடத்தில விழுபவை முட்டாள் குண்டுகள். ஒரு முட்டாள் குண்டிற்கு சிறகுகளையும், வழிகாட்டும் அமைப்பையும் பொருத்தி, யாராலும் தடுக்க முடியாத கெட்டிக்காரக் குண்டாக மாற்றியிருக்கிறது ரஷ்யா.

ஆயிரத்து ஐந்நூறு கிலோ எடையுடைய குண்டுகள், விமானத்திலிருந்து வீசப்பட்டவுடன் அதற்கு இறக்கைகள் முளைத்துக் கொள்ளும். சறுக்கியபடியே இலக்கை அடைந்து, பதினைந்து மீட்டர் அகலக்குழியை நிலத்தில் ஏற்படுத்தும் அசுர குண்டுகளின் பெயர் FAB – 1500. துல்லியமாகத் தாக்கிப் பேரழிவை ஏற்படுத்தும் உத்தரவாதத்தோடு தயாரிக்கப்படுபவை. செங்குத்தாக விழாமல், சறுக்குப்பாதையில் விழுவதால் இதன் வேகம் அதிகம். பாரம்பரிய ஏவுகணைகளைப் போல, இவற்றைத் தடுக்க முடியாது. இலக்கின் மேல்பறந்து, இந்தக் குண்டை வீச வேண்டியதில்லை. எழுபது கிமீ தொலைவிலிருந்து, சௌகரியமாக வீசலாம். இத்தனை தூரத்திலிருப்பதால், உக்ரைன் வான் பாதுகாப்புப் படையிடம் மாட்டிக்கொள்ளும் சாத்தியமும் இல்லை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!