10 – வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (22.11.1839 – 15.7.1897 )
அறிமுகம்
‘தமிழ்க் கடவுள்’ என்று சொல்லப்படுபவர் முருகவேள். தமிழில் முருக பக்த இலக்கியமாகவும், செறிவு மிக்க இலக்கியமாகவும் விளங்கிய ஒரு நூல் என்றால் உடனே நமக்குச் சட்டென்று நினைவுக்கு வரும் ஒரு பெயர் உண்டு. அது திருப்புகழ் மற்றும் அருணகிரிநாதர். திருப்புகழ் நூல் அதன் சைவசித்தாந்தக் கருத்துக்கள், சந்த நயமிக்க செழுமையான மொழி என இரண்டு விதத்திலும் புகழ் பெற்றது. அத்தகைய செறிவு மிக்க நூலை எழுதிய அருணகிரிநாதரின் வரலாறு அற்புதங்கள் நிறைந்தது. அதேபோன்று, அருணகிரிநாதர் காலத்திற்குப் பிறகு இன்னொருவர் அதே காரணங்களுக்காகப் பெரும் புகழ் பெற்றார். அவர் ஒரு இலக்கம் (நூறாயிரம்) பாடல்களுக்கும் மேல் புனைந்தவர் என்று குறிப்புகள் சொல்கின்றன. அவரைப் பற்றி நாமெல்லாம் நன்கு அறிந்த திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் வியந்தோதியிருக்கிறார். அந்த மனிதரும் திருப்புகழ் சுவாமிகள் என்ற அடைமொழியுடன்தான் அழைக்கப்பட்டார். அவர்தான் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள். அவருக்கு இயல்பாக வைக்கப்பட்ட பெயர் சங்கரலிங்கம். எனினும் எட்டரை வயது முதலே அவரது வாழ்வு பல சித்துக்களும் அற்புதங்களும் நிறையப் பெற்ற ஒன்றாக விளங்கியதாலும், முருக பக்தியில் எல்லையற்ற ஈடுபாட்டுடன் விளங்கியதாலும் அவர் தண்டபாணி சுவாமிகள் என்றே அறியப்பெற்றார். அவரைப் பற்றிய வரலாற்றை இக்கட்டுரையில் காண்போம்.
Add Comment