கா.சுப்பிரமணியபிள்ளை (30.11.1888 – 03.12.1969)
அறிமுகம்
தொழில்முறையில் படித்தது வழக்கறிஞர் படிப்பு. தமிழிலும் சைவ சித்தாந்தத்திலும் ஆழ்ந்த ஈடுபாடும் பயிற்சியும் கொண்டவர். நெல்லை மண் தமிழுக்கு அளித்த பல மாணிக்கங்களுள் ஒருவர். தமிழ் இலக்கிய வரலாறை முதன் முதலில் எழுதிய பெருமைக்கு உரியவர். (பரிதிமாற்கலைஞரையே இப்பெருமை சேரும் என்போரும் உண்டு). வழக்குரைஞராகத் தேர்வுற்றும் ஆசிரியராகப் பணியில் இருந்தவர். இலக்கியமும் சட்டமும் இணைந்து கோலோச்சும் இந்து அறநிலையத்துறை மசோதா பற்றிய இவரது செந்தமிழ்ச்செல்வி இதழின் கட்டுரைகள் குறிப்பிட்டுச் சொல்லத் தகுந்தவை. மொழிபெயர்ப்பாளர், உரையாசிரியர், சொற்பொழிவாளர். அதோடு தமிழ், ஆங்கிலம், வடமொழி, மலையாளம் என்று பன் மொழிகள் கற்ற ஒரு பன்மொழி வித்தகர். சட்ட வல்லுநர்; முதன் முதலில் சட்ட மேற்படிப்பான எம்.எல் படித்ததால், எம்.எல். பிள்ளை வீடு என்ற அடைமொழியை அவர் வசித்த நெல்லைப்புரம் பெற்றது. அரசியலில் ஈடுபடாவிட்டாலும் திராவிட இயக்கக் கொள்கைகளில் பற்று கொண்டவர். உ.வே.சா, ‘சுப்பிரமணியனுக்குப் புத்தகமே தேவையில்லை’ என்று தனது மாணவனைக் குறித்துப் பெருமையுடன் சொல்லும் வண்ணமான மாணவனாக இருந்தவர். ஆயிரம் பக்கங்கள் இருக்கும் நூலைக் கூட சில மணி நேரங்களில் படித்துவிடுவார் என்ற பெயரைப் பெற்றவர்.
Add Comment