Home » வசதியும் வாக்குவாதமும்
மெட்ரோ கதைகள்

வசதியும் வாக்குவாதமும்

மெட்ரோவுக்குப் படிக்கட்டுகள் கிடையாது. நடைமேடையிலிருந்து பெட்டிக்குள் முட்டி வலிக்க ஏறிச் செல்ல வேண்டாம். எட்டி ஓரடி எடுத்து வைத்தாலே போதும். நடைமேடை இடைவெளிகளும் மிகக் குறுகியவை. சுரங்கப் பாதை நிலையங்களில் தண்டவாளங்களின் இருபுறமும் பாதுகாப்புக்காகக் கதவுகள் போட்டிருப்பார்கள்.

இப்படி ஏராளமான வசதிகள் இருந்தபோதிலும் புறநகர் ரயில் போல இல்லை என்று குறைபட்டுக் கொண்டாள் ரேவதி.

‘என்னவோ மெட்ரோ மெட்ரோன்னு சீன் போடறீங்க. ஹலோ… கேக்குதா… கேக்குதான்னு கேட்டே பாதி நேரம் போயிடுது. ரெண்டு வார்த்தை பேசறத்துக்குள்ள லைன் கட் ஆகிடுது. சத்தமா பேசவும் முடியல. எல்லாரும் என்னவோ மாதிரி பார்க்கறாங்க. அங்க சப்-அர்பன்ல டிராவல் பண்ற நேரத்துலதான் அக்காவுக்கும் அம்மாவுக்கும் கால் பண்ணிப் பேசுவேன். என்னோட ஃப்ரீ டைம், மீ டைம் எல்லாமே அந்த ஒரு மணிநேரம்தான். அதை இந்த மெட்ரோ சுத்தமா ஸ்பாயில் பண்ணிருச்சு.’

சுரங்கப்பாதை மெட்ரோ நிலையங்களில் ரயிலுக்குள் இணையத் தொடர்பு சீராகக் கிடைக்காது. ஆரம்பித்த இரண்டு நொடிகளில் வீடியோ உறைந்து நின்றுவிடும். நெட்வொர்க் இணைப்புகளும் திக்கித் திக்கித்தான் வரும். மொத்தமுள்ள நாற்பத்தொரு நிலையங்களில் ஐம்பது சதவீதம் நிலத்துக்கு அடியில்தான்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!