Home » உரி – 125
உரி நாள்தோறும்

உரி – 125

125. முன்னிலை – படர்க்கை

எனக்கொரு வினா இருந்தது. குடந்தை மாநகரிலிருந்து சார்வாகன் மல்லனால் செலுத்திக்கொண்டு வரப்பட்ட நொடியே அந்த வினா எழுந்துவிட்டது. நிச்சயமாகச் சார்வாகனுக்கும் அது எழுமென்று எதிர்பார்த்தேன். ஆனால் மல்லன் அவனது சிந்தைக்குள் இருந்த நேரத்தில் அதை நான் அகழ்ந்து பயனில்லை. மீண்டும் எதுவுமற்ற பாழ்வெளியென்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கும். அல்லது அழிவுத் திட்டமும் வன்மமும் வெறியும் மேலோங்கிய சிந்தையின் தீக்கங்குகளைக் கிளறினால் என்ன கிடைக்குமோ அதுதான் அகப்படும். எனவே, மல்லன் விலகிச் சென்ற பின்பு அப்பணியை மேற்கொள்ளலாமென்று எண்ணியிருந்தேன்.

அதற்கு அவசியம் ஏற்படவில்லை. சார்வாகனே கருவூராரிடம் கேட்டான்,

ஐயனே இதற்கு விடையளியுங்கள். நான் வேட்டனைத் தேடிச் செல்கிறேன். எப்படியாவது அவனைக் கண்டடைவேன். என்னைத் தந்தேனும் அவனது இயக்கத்தை முறிப்பேன். இது நான் உங்களுக்கு அளிக்கும் வாக்கு. ஆனால் இக்கணம் வரை வேட்டனோ அவனைச் சார்ந்தவர்களில் யாரேனுமோ எனக்குத் தென்பட்டதில்லை. என் சிந்தைக்குள் வந்து அமர்பவன் வேட்டனாகவே இருப்பானாகின், என்றென்றும் அவன் எனக்குத் தென்படப் போவதில்லை. தவிர, என் சிந்தை களவாடப்படும்போதெல்லாம் நான் வேட்டனின் கருவியாகத்தான் இயங்குவேனே அல்லாமல் அவனை முடக்க என்னால் என்ன செய்துவிட முடியும்?

கருவூரார் மெல்லத் தலையசைத்தார். சிறிது நேரம் அமைதியாக நிலம் நோக்கிக் குனிந்து அமர்ந்திருந்தார். பிறகு அவனை நிமிர்ந்து பார்த்துச் சொன்னார்,

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!