Home » உரி – 65
உரி • நாள்தோறும்

உரி – 65

65. தீக்கை

ஆசிச் சொற்கள், அந்தந்த நேரத்தில் மகிழ்ச்சி கொள்வதற்காக மட்டுமே என்று அவன் எண்ணியிருந்தான். அவனது தாயும் தகப்பனும் ஒவ்வொரு நாளும் அவனுக்கு ஆசி கூறுவார்கள். புவி வியக்கும் பெருஞ்சிற்பியாக அவன் விளங்குவான் என்று அவனது தகப்பன் சொல்லாத நாளே இல்லை. அவனது சிற்ப மண்டபத்தில் அவனோடு வேலை செய்யும் மற்ற பல சிற்பிகளும் வேட்டன் ஒரு நாள் மாபெரும் சாதனைச் செயல்களைப் புரிவான் என்று சொல்லியிருக்கிறார்கள். உறவினர்கள் ஆசி கூறியிருக்கிறார்கள். ஊர்ப் பெரியவர்கள் கூறியிருக்கிறார்கள். மல்லைப்புரத்துக்கு அவன் தனது தகப்பனுடன் சென்று உளி ஏந்திப் பணி புரியத் தொடங்கியதிலிருந்து, அறிமுகமற்ற பலபேரிடமிருந்து பல முறை ஆசிச் சொற்களைப் பெற்றிருக்கிறான். அவன் வயதுக்கு அவனுக்கிருந்த ஆற்றல் மிகப் பெரிதென்று ராஜாங்கப் பணியாளர்களும் சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் அப்படிச் சொல்லும்போதெல்லாம் அவனுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். இன்னும் சிறப்பாக, மேலும் சிறப்பாகத் தான் வடிக்கும் சிற்பங்கள் அமைய வேண்டுமென்று நினைப்பான்.

கருவூர்ச் சித்தர், நீ மரணமிலாப் பெருவாழ்வு வாழ்வாய் என்று ஆசி கூறியபோதும் அவன் மகிழ்ச்சியடைந்தான். ஆனால் அது வெறும் ஆசிச் சொல் மட்டுமல்ல; செயலாக உருக்கொள்ளாத ஒரு சொல்லையும் அவர் உதிர்ப்பதில்லை என்று மயூரமுகி சொன்னாள்.

உண்மையாகவா, உண்மையாகவா என்று பலமுறை அவன் கேட்டுக் கேட்டு நிச்சயப்படுத்திக்கொள்ளப் பார்த்தான். ஆயினும் ஐயமிருந்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!