66. நிருதி
மீண்டும் அவர்கள் குன்றத்தின் உச்சிக்கு வந்து சேர்ந்தபோது புலரும் பொழுது நெருங்கிவிட்டிருந்தது. வேட்டன் மிகவும் களைப்புற்றிருந்தான். நான் சிறிது நேரமாவது உறங்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் அவளிடம் சொன்னான்.
உறக்கத்தை நினைக்காதே வேட்டனே. புவி உறங்கும் பொழுதெல்லாம் விழித்திருந்து செய்ய வேண்டியவற்றை மட்டும் எண்ணிக்கொள்,
என்று மயூரமுகி சொன்னாள்.
ஆசையாகத்தான் இருக்கிறது. ஆனால் ஆசை ஒன்றைத் தவிர வேறெதுவும் இல்லாதிருக்கிறேன் தமக்கையே. உன் தவத்தைக் குறித்தெல்லாம் கேட்டறிந்த பின்பு நாணத்தில் குன்றியிருக்கிறேன்.









Add Comment