Home » உரி – 69
உரி நாள்தோறும்

உரி – 69

69. நீர்த் திரை

இரண்டு சர்ப்பங்கள். மூன்று பட்சிகள். அதிலொன்று நீலக் கிளி. உள்ளன் ஒன்று. அயம் ஒன்று. வராகங்கள் மூன்று. சோணங்கி ஒன்று. சிமிழுக்குள் வைக்கப்பட்டிருந்த நெல்மணி ஒன்று. வரிசையில் இவற்றை அடுத்தடுத்துக் கண்டதும் சார்வாகனுக்குச் சிரிப்புப் பொங்கி வந்தது. அவன் அதரம் திறந்து வான் நோக்கிச் சத்தமிட்டுச் சிரித்தான். இடைவெளியின்றிச் சில நொடிகள் சிரித்துக்கொண்டே இருந்தான். சிரிக்கும்போது அவனது தோள்கள் குறுகிக் குன்றின. வயிறு உள்ளிழுத்துக்கொண்டது. தன்னை மறந்து லயித்துச் சிரித்து ஓய்ததும் குடிக்க நீர் வேண்டுமென்று கேட்டான். உதுமானி நாயனார் தனது குடிலுக்குள் சென்று குடுவையொன்றில் நீர் எடுத்து வந்து அவனிடம் தந்தார். குடிக்கப் போனவன், சட்டென்று நிறுத்தி, குடுவையைப் பார்த்தான். அம்மட்குடுவையில் கழுத்தளவுக்கு நீர் இருந்தது. இப்போது மீண்டும் சிரித்தான். அதே வெடிச்சிரிப்பு.

நாயனார் புன்னகை செய்தார்.

எனக்கு வேறு வழி தெரியவில்லை சார்வாகனே. உன்னைச் சுற்றி இத்தனை பேரை நிறுத்தியதால்தான் நிகழும் அனர்த்தத்தங்கள் அனைத்துக்கும் நீ வெறும் கருவி என்பது விளங்கியது. இல்லாவிடில் நிகழவிருக்கும் நாசகாரச் செயல்கள் அனைத்தையும் நிகழ்த்தவிருப்பவன் நீயே என்று முடிவு செய்திருப்பேன்.

சித்தனே, ஒரு பேச்சுக்கு அது நான் என்பதாகவே இருக்கட்டும். என்னை என்ன செய்வதாக உத்தேசித்திருந்தாய்?

செயலற.

கொன்றிருப்பாயா அல்லது உன் குருநாதன் அடைத்து வைத்திருந்தானே, அப்படியொரு மாயக் குகைக்குள் கொண்டு சிறை வைத்திருப்பாயா?

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!