Home » உரி – 75
உரி நாள்தோறும்

உரி – 75

75. நீயா?

மூன்று யாமங்கள் முழுதாகக் கழிந்து, நான்காம் யாமத்தின் இரண்டாவது முகூர்த்தம் முடியவிருந்தது. படுத்த நொடியில் உறங்கத் தொடங்கியவன், அதுவரை அசைவின்றி உறங்கிக்கொண்டிருந்தான். உறக்கத்தில் அவன் புரள்வதுகூட இல்லை. இரவுப் பூச்சிகளோ, பாச்சையோ அவனது உடலத்தின் மீதேறிச் சென்றாலும் அவன் உறக்கம் கலைந்து எழுவதில்லை. இது எனக்கு முன்பே தெரியும். ஆனால், நான் அறியாத ஒரு விவரத்தினை அன்று அறிந்தேன்.

அபுது அன்றைக்குப் பொழுது புலர்வதற்கு முன்னமே வந்து அவனைச் சந்திப்பதாகச் சொல்லிவிட்டுச் சென்றிருந்தான். நான்காம் யாமம் முடிவதற்கு ஒன்றரை நாழிகைப் பொழுது இருந்தபோது அவனும் உதுமானி நாயனாரும் சார்வாகன் தங்கியிருந்த குடிலை நோக்கி வந்ததைக் கண்டேன். அவர்கள் உரையாடிக்கொண்டே வரவில்லை. வெளியில் வேறெந்த சத்தமும் இல்லை. ஆயினும் குடில் வாசலை அவர்கள் நெருங்கிய நொடியில் அவன் மின்னல் தாக்கினாற்போலத் துள்ளி எழுந்து வெளியே வந்து அவர்களுக்கு வணக்கம் சொன்னான்.

உறங்கினாயா என்று நாயனார் கேட்டார்.

அதற்கென்ன. படுத்ததும் உறங்கிவிடுவேன். இடமோ இன்னொன்றோ எனக்குப் பொருட்டே அல்ல.

நல்லது. வா,

என்று அவனையும் குடிலுக்குள்ளே அழைத்து வந்து இருவரும் அமர்ந்தார்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!