Home » மௌனம் சம்மதம் அல்ல!
உலகம்

மௌனம் சம்மதம் அல்ல!

உலக வரைபடத்தில் பார்த்தால் மலைகளால் சூழப்பட்ட நாடு. உலகச் செய்திகளில் பார்த்தால் போர், குண்டுவெடிப்பு, தாலிபன், அகதிகள். இவையே ஆஃப்கனிஸ்தான் என்றதும் நம் நினைவுக்கு வருபவை. ஆஃப்கனிஸ்தானின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதியில் பாகிஸ்தானும், மேற்கில் இரானும், வடக்கில் சில மத்திய ஆசிய நாடுகளும், வலப்புறத்தில் சீனாவும் எல்லைகளாக அமைந்துள்ளன.

ஆஃப்கனிஸ்தான் மத்திய ஆசியா மற்றும் தென் ஆசியாவை இணைக்கும் முக்கியப் புவியியல் இடத்தில் இருப்பதால், பல நூற்றாண்டுகளாக வணிகம், படையெடுப்பு, அரசியல் போட்டி ஆகியவற்றின் மையமாகவும் இருந்து வருகிறது. இதனால்தான் ஆஃப்கனிஸ்தானை வரலாற்றாளர்கள் ‘ஆசியாவின் இதயம்’ என்று குறிப்பிடுகிறார்கள்.

ஆனால் கடந்த ஐம்பது ஆண்டுகளாக இந்த நாடு பார்த்தது போர் மட்டுமே. 1979இல் ரஷ்யா படையெடுத்தது. பிறகு உள்நாட்டுக் கலவரம். 1996இல் தாலிபன் அமைப்பு ஆட்சியைக் கைப்பற்றியது. 2001இல் அமெரிக்கா போரிட்டு அவர்களை விரட்டியது. 2021இல் அமெரிக்கா திரும்பிப் போனதும் தாலிபன் மீண்டும் வந்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!