தமிழகத்தில் தவெக தலைவர் விஜய் தலைமையிலான புதிய அரசு பதவியேற்று இரண்டு வாரங்கள் ஆகின்றன. அறுபது வருடங்களாக இரண்டு திராவிடக் கட்சிகளை மட்டுமே மாறி மாறித் தேர்ந்தெடுத்து வந்த தமிழக மக்கள், இந்த முறை அரசியலுக்குப் புதிய முகமான விஜய்யை நம்பிக்கையோடு தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
தன்னையும் தனது கட்சியையும் தூய சக்தி என்றும், தமிழ்நாட்டுக்கு ஒரு நல்ல மாற்றத்தைக் கொண்டுவருவோம் என்றும் தேர்தல் பிரசாரத்தின்போது வாக்குறுதி அளித்திருந்தார் விஜய். அவருடைய திரைப் பிரபலத்தையும் தாண்டி அவரது கட்சிக்கு மக்கள் வாக்களிக்க இந்த வாக்குறுதிகள்தான் முக்கியக் காரணம்.
அதற்கேற்ப, தேர்தலில் பெரும்பாலான இடங்களை வென்ற கட்சியாக இருந்தாலும் பெரும்பான்மை எண்ணிக்கை கிடைக்காததால் கூட்டணி ஆட்சி அமைத்தார் விஜய். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெற்றி பெற்ற காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவை மட்டும் பெற்றார். பாஜகவோடு கூட்டணியிலிருந்த அதிமுக, பாமக போன்றவற்றிடம் அவர் ஆதரவே கோரவில்லை. மேலும், கம்யூனிஸ்ட் நீங்கலாக மற்ற அனைத்துக் கூட்டணிக் கட்சிகளுக்கும் அமைச்சரவையிலும் இடமளித்தார்.















Add Comment