Home » இந்திய விஞ்ஞானிக்கு ‘ராயல்’ கௌரவம்
ஆளுமை

இந்திய விஞ்ஞானிக்கு ‘ராயல்’ கௌரவம்

டாக்டர் சௌம்யா சுவாமிநாதன்

அறிவியல் துறை ஒரு கனவைப் போன்றது. மற்றவர்கள் கிஞ்சித்தும் சிந்தித்துப் பார்க்காதவை விஞ்ஞானிகளின் எண்ணத்தில் உதிக்கும். அவற்றை நிஜமாக்குவதற்கு நேரத்தைவிட அதிக முயற்சி அவசியம். அடிப்படைகளைக் கற்றுக் கொள்ளப் பல ஆண்டுகள் செலவிட வேண்டும். கற்றவற்றைப் பயன்படுத்தி, யாருக்கும் தெரியாத ஒன்றைக் கண்டறிய மேலும் பல ஆண்டுகள் உழைக்க வேண்டும். அதற்கு எல்லையற்ற மன உறுதியும், அசைக்க முடியாத நம்பிக்கையும் தேவை. அறிவியல் ஆர்வத்துடன் பலர் பிறக்கிறார்கள். அவர்களில் சிலர் மட்டுமே வெற்றிகரமான விஞ்ஞானிகளாகிறார்கள்.

இந்தியாவில் அவர்களில் ஒரு தந்தை – மகள் ஜோடி அடங்குவர். இந்தியாவின் முன்னணி விஞ்ஞானிகளில் ஒருவர் டாக்டர் சௌம்யா சுவாமிநாதன். இவர் ராயல் சொசைட்டியின் உறுப்பினராக (Fellow of Royal Society -FRS) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

1660ஆம் ஆண்டு லண்டனில் தொடங்கப்பட்ட, நானூறு ஆண்டுகள் பழைமையான அறிவியல் அகாடமி இந்த ராயல் சொசைட்டி. இன்று வரை இந்த அமைப்பு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள், பொறியாளர்கள், மருத்துவர்களை இந்த அமைப்பு உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுத்துக் கௌரவப்படுத்துகிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!